126

பத்துப்பாட்டு

மாகிய செவ்விய கோலாலும் தண்ணளிசெய்தற்கெடுத்த ஒரு குடையாலும் தனது ஆணையையே உலகங் கூறும்படியாகவும் முதியோர் முரண் செல்லும்படியாகவும் பெரியநட்புடனே நெடுங்காலம் உலகையாண்ட வெல்கின்ற வேலையுடைய தலைவன்,;

ஒரு குடை என்றதனாலும், ஒன்றுகூற என்றதனாலும் இவன் மண் முழுவதும் ஆண்டானென்றார்.;

அன்னோன் - யான்கூறிய அத்தன்மைகளையுடையோன்,;

வாழி - வாழ்வாயாக ;;

இறுதி யகரம் கெட்டுநின்றது.;

232 - 3. [ மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மா, ணெல்லை தருநன் பல்கதிர் பரப்பி :]

மன்னர் நடுங்க தோன்றி - பகையரசர் நடுங்கும்படி விளங்கி,;

பல் மாண் எல்லை தருநன் பல் கதிர் பரப்பி - பல்லுயிர்களும் மாட்சிமைப்படுதற்குக் காரணமாகிய பகற்பொழுதைத்தருங்கதிரோன் தன்னிலையைவிட்டுப் பலகிரணங்களைப் பரப்புகையினாலே,

234. குல்லை கரியவும் - 1கஞ்சங்குல்லை தீயவும்,;

கோடு எரி நைப்பவும் - மரங்களினுடைய கொம்புகளை நெருப்புத் தின்னவும்,

235. [ அருவி மா மலை நிழத்தவும் :] மா மலை அருவி 2நிழத்தவும் - பெருமையையுடைய மலை தன்னிடத்து அருவிகளை இல்லையாக்கவும்,;

235 - 6. மற்ற கருவி வானம் கடல் கோள் மறப்பவும் - இவையொழிந்த தொகுதியையுடைய மேகம் கடலிடத்து முகத்தலை மறப்பவும்,;

237. பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் - பெரிய வற்கட முண்டாகிய நற்குணமில்லாத காலத்தும்,;

கரியவும் நைப்பவும் (234) நிழத்தவும் (235) மறப்பவும் (236) வறனாகிய காலையுமென முடிக்க.;

238 - 9. [ நறையு நரந்தமு மகிலு மாரமுந், துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி :] நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொறை துறைதுறை தோறும் உயிர்த்து ஒழுகி - நறைக்கொடியும் நரந்தப்புல்லும் அகிலும் சந்தனமுமாகிய சுமையைத் துறைதோறும் துறைதோறும் இளைப்பாறத் தள்ளிப்போய்,;

240. நுரை தலை குரை புனல் - நுரையைத் தலையிலேயுடைய ஆரவாரத்தையுடைய நீர்,;

வரைப்பு அகம் புகுதொறும் - குளத்திலும் 3கோட்டகத்திலும் புகுந்தோறும்,;


1 கஞ்சா. 2 தொல். உரியியல், சூ. 32. 3 ஒருவகை நீர் நிலை.