128

பத்துப்பாட்டு

"முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி ................வேண்டும்" (தொல். எச்ச. சூ. 66) என்பதனான், இங்ஙனமுடிந்தது.

";கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியு, மாற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச், சென்று பய னெதிரச் சொன்ன பக்கமும்" (தொல். புறத். சூ. 108) என்பது இதற்கு விதி.

";ஆசிரிய நடைத்தே வஞ்சி"; (தொல். செய். சூ. 368) என்பதனாற் பின்னர் வஞ்சி மிகவும் வந்தனவென்றுணர்க.;

சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த உரை முற்றிற்று.


வெண்பா

11ஏரியு மேற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளனெல்லாந் - தேரின்;
அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலுங்
கரிகாலன்
காவிரிசூழ் நாடு.
2அரிமா சுமந்த வமளிமே லானைத்
2திருமா வளவனெனத் தேறேன் - திருமார்பின்
மானமா லென்றே தொழுதேன் றொழுதகைப்
போனவா பெய்த வளை.;
33முச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்
இச்சக் கரமே யளந்ததாற் - செய்ச்செய்
அரிகான்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன்
4கரிகாலன் கானெருப் புற்று.;

1 தொல். புறத்திணை. சூ. 31, ந. மேற்.

2 "திருமாவளவன்" (பட்டினப். 229); "செருவெ காதலிற் றிரு மா வளவன்" (சிலப். 5 : 90)

3 இச்செய்யுள் பட்டினப்பாலையின் இறுதியிலும் காணப்படுகிறது.;

4 கரிகாலன் கானெருப்புற்று : புதுக்கோட்டைக்குடுமியாமலைச் சாஸனம்.