1 - திருமுருகாற்றுப்படை 95 | மந்திர விதியின் மரபுளி வழாஅ வந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுக மெஞ்சிய பொருள்களை யேமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே யொருமுகஞ் செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக் | 100 | கறுவுகொ ணெஞ்மொடு களம்வேட் டன்றே யொருமுகங் குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகைமர்ந் தன்றே யாங்கம், மூவிரு முகனு முறைநவின் றொழுகலி னாரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற் | 105 | செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள். |
95. "மரபுளிவழாஅ வந்தணர் - முறைமையின் வழுவாத அந்தணரென ஐந்தாவதுவிரிதலானும்" (தொல். இடை. சூ. 2, ந.) 95-6. மந்திரவிதியின் மரபுளி வழாஅ வந்தனர்: மந்திர விதியினந்த ணாளன்" (பெருங். 3. 6 : 42) 99-100. பகைவரை வென்று களவேள்வி வேட்டல்: "அரசுபட வமருழக்கி ............... களம்வேட்ட, அடுதிறலுயர் புகழ்வேந்தே" (மதுரைக். 128-30); "அரைசுபட வமருழக்கி ........... அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய", "புலவுக்களம் பொலிய வேட்டோய்" (புறநா. 26 : 6-11, 372 : 12); "பாண்டியன் சோழற் காய்ந்து, பெருங்கள வேள்வி செய்த பீடுடைக் காட்டு நாட்டு" (திருவால. 44 : 54); களவேள்வி யென்பது வாகைத் திணையுள் ஒரு துறைக்குப் பெயர்; "அடுதிற லணங்கார, விடு திறலான் களம் வேட்டன்று" (பு. வெ. 160) என்பது அதன் இலக்கணம். 104. மு. (புறநா. 59 : 1, 152 : 10); "தாழாரமார்பினான்" (பு. வெ. 43) 104-5. மார்பிற், செம்பொறி வாங்கிய மொய்ம்பில்: " பொறி யுடைமார்ப" (பெருங். 5.2 : 8); "பொறிகுலாய்க் கிடந்த மார்பிற் புண்ணியன்" (சீவக. 1706); "செவ்வரை யாகத்தான்" (சீகாளத்திப். நக்கீர. 33) 106 வண்புகழ் : "வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென " (முருகு. 285) ; "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு " (தொல். செய். சூ. 79); "வண்புகழ் பாரி காரி " (திருப்புகழ்) 104-6."மார்பிடை வரியு மூன்றுள" என்பதற்கு இவ்வடி மேற்கோள்; சீவக. 1462, ந.
|