25 | தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப் பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறெனக் குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த | 30 | முல்லை சான்ற கற்பின் மெல்லியன் மடமா னோக்கின் வாணுதல் விறலியர் நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி கல்லா விளையர் மெல்லத் தைவரப் பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பி | 35 | னின்குரற் சீறியா ழிடவயிற் றழீஇ |
25 - 6. "யாணர்க் கோங்கின் குவிமுகை யெள்ளிப், பூணகத் தொடுங்குமுலை"(ஞானாமிர்தம்); "யாணர்க் கோங்கின் மென்முகிழ் முலை" (பாகவதம், 10. கோவியர். 13);முருகு. 34 - 5, ந. குறிப்புரையைப் பார்க்க. 27. இவ்வடி, நுங்கென்பது புல்லொடு வந்ததற்கு மேற்கோள்; (தொல். மரபு. சூ. 86, பேர்.உரை) 28. (பி-ம்.) ‘செறி நீர்தகும்' 19 - 28. "ஈர்ந்து நிலந்தோயும்........எயிற்றின்' என்னும் இச் சந்தானவுவமை மாலையுவமையின்பாற்படும்" (இ-வி. சூ. 645); பாடபேதமுண்டு. 30. "முல்லை சான்ற கற்பின்,மெல்லியற் குறுமகள்" (நற். 142 : 10 - 11); அகநா. 274 : 13 - 4. "தேவி முல்லை வளர்த்தற்குக் காரணம் கற்புடைமை யென வுணர்க; ‘முல்லை சான்ற கற்பின் மெல்லியல்' இது சிறுபாணாற்றுப்படை"(தக்க. 75) 32. (பி-ம்.) ‘நலமென் சீறடி' 33. "கல்லா மறவர் கணைமாரி"(பு. வெ. 66) 34. "பொன்றிரித் தன்ன நிறத்தன.........நரம்பு" (பெருங். 3. 15 : 53 - 4) 34 - 5. "பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின், றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ" (பெரும்பாண். 15 - 6);"பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்,மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்"(புறநா. 308 : 1 - 2); "நந்தாது பொன் வார்ந்தன யாழினரம்புளர்ந்து" (பாகவதம், 10. கோவர்த்தன. 39)
|