| நைவளம் பழுநிய நயந்தெரி பாலை கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத் துனிகூ ரெவ்வமொடு துயராற்றுப் படுப்ப | 40 | முனிவிகந் திருந்த முதுவா யிரவல கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க் கழுநீர் மேய்ந்த கயவா யெருமை பைங்கறி நிவந்த பலவி னீழன் மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர | 45 | விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக் குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங் குடபுலங் காவலர் மருமா னொன்னார் வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த வெழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவன் | 50 | வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே யதா அன்று நறவுவா யுறைக்கு நாகுமுதிர் நுணவத் தறைவாய்க் குறுந்துணி யயிலுளி பொருத |
36. (பி-ம்.) ‘பழுனிய' 36 - 7. நைவளம் பழுநிய பாலை வல்லோன்" (குறிஞ்சிப். 146) 38 - 9. கூர்ப்பு, முன்சிறவாதுள்ளதொன்று சிறத்தலாகிய குறிப்புணர்த்து மென்பதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 18, சே. சூ. 16, ந.; இ-வி. சூ. .281, உரை. 40. முது வாயொக்கல்", "முதுவாய்க் கோடியர்"(பட்டினப். 214, 253); "நீயும் வம்மோ முதுவாயிரவல; (புறநா. 180 : 9); முருகு.284, ந. குறிப்புரையைப் பார்க்க. 42. நற், 260 : 1. 45. ;நெய்தல், விளையா விளங்க ணாற" (அகநா. 113 : 6, 400 : 21-2) 42 - 7. தடமருப் பெருமை தாமரை முனையின், முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியுங், குடநாடு" (அகநா. 91 : 15 - 7) 50. (பி-ம்.) ‘புனல் வஞ்சி வாயிலும் வறிதே' ‘வஞ்சியும் வறிதே, மதுரையும் வறிதே, உறந்தையும் வறிதே' என்றாராகலின், இதனைப் பேராச்சிறப்பினையுடைய புகாரென்றார்" (சிலப். பதிகம்: 12 - 20, அடியார்.) 51. நாகு பெண்மையே யன்றி இளமையுமுணர்த்து மென்பதற்கு, ‘நாகுமுதிர் நுணவம்' என்பது மேற்கோள்; சீவக. 74, ந. நாகுமுதிர் நுணவம்: நாகுமுதிர் நாகத்து; (சிறுபாண். 108)
|