135
நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை
70யோவத் தன்ன வுண்டுறை மருங்கிற்
கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்
வருமுலை யன்ன வண்முகை யுடைந்து
திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை
யாசி லங்கை யரக்குத்தோய்ந் தன்ன
75சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை
யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து
காமரு தும்பி காமரஞ் செப்புந்
தண்பணை தழீஇய தளரா விருக்கைக்
குணபுலங் காவலர் மருமா னொன்னா
80ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந்
தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய

69.கடம்பின் துணையார் கோதை;திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய,துணையமை மாலை; (குறிஞ்சிப். 176-7); கடம்பு சூடிய கன்னிமாலை;(சீவக. 990);செந்தொடையுஞ் செய்யுட்பொலிவு செய்யுங்காற் கொன்றையுங் கடம்பும் போல நின்றவாறே நின்றுதொடைப் பொலிவு செய்யுமென்பதாம்; (தொல்.செய்யுளியல், சூ. 94, பேர்.)

துணையார்கோதை: "துணைமலர்ப் பிணைய லன்னவிவர்", "துணைத்த கோதைப் பணைப்பெருந் தோளினர்" (குறுந். 229 : 6, 326 : 1) "தூநீர் பயந்த துணையமை பிணையல்; (அகநா.5 : 23)

70.(பி-ம்.) ‘வண்டுறை'

71.(பி-ம்.) ‘கோபத்தன்ன'

72 - 3.தொல். உவம. சூ. 9, பேர். உரை, மேற்.;இ-வி. சூ. 640, உரை, மேற்.

78.தண்பணைதழீஇயவிருக்கை;(யா. வி. மேற்."சுறமறிவன","குருகுநாரை") ; பொருந. 169, ந.குறிப்புரையைப் பார்க்க.

81 - 2 வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப, எயின்மூன் றெறிந்த விகல்வேற் கொற்றமும்", "தூங்கெயின் மூன் றெறிந்த சோழன்" (சிலப்: 27: 164 - 5, 29:வீங்குநீர்); "தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்" (மணி. 1 : 4);ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறற், றூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர்