136
னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று
வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
85கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
வருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
90பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்
பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி

(புறநா. 39 : 5 - 5); "வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பிற், றூங்கு மெயிலுந் தொலைத்தலால்" (பழமொழி, 49); "திறல் விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த, விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்" (தொல். களவு. சூ. 11, ந. "கண்ணே"); "தேங்கு தூங்கெயி லெறிந்த வவனும்" (கலிங்க. இராச. 17); "கூடார்தம், தூங்கு மெயிலெறிந்த சோழனும்" (விக்கிரம. 8 - 9); "தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன்" (குலோத். உலா); "வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத், தூங்கும் புரிசை துணித்தகோன்" (இராசராச. 13)

83.ஓடாப்பூட்கை: "ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி" (முருகு. 247) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.

உறந்தையும் வறிதே : சிலப். பதி. 12-20, அடியார். மேற்.

84.மலைக்கவான்:"குறங்கு-மலையடிவாரம்; ‘வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்' இது சிறுபாணாறு" (தக்க. 540, உரை)

86.ஆவியர் பெருமகன்: "அதுமனெம் பரிசி லாவியர் கோவே" (புறநா. 147 : 9)

84 - 7. "உடாஅ போரா வகுத லறிந்தும், படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன்" (புறநா. 141 : 10 - 12)

86 - 7."அருந்திறற் கடவுள் காக்கு முயற்சிமைப், பெருங்க னாடன் பேகனும்" (புறநா. 158 : 11 - 12)

88. (பி-ம்.) ‘நறவுவா யுறைக்கும்'

91. "கொடுக்கிலாதானைப் பாரியேயென்று கூறினுங் கோடுப் பாரிலை" (தே. சுந். புகலூர்)

90 - 91. "நெடுவரைக், கருங்குவெள் ளருவி கல்லைத் தொழுகும், பறம்பிற் கோமான் பாரியும்" (புறநா. 158 : 2 - 4)

89 - 91 "பூத்தலை யறாஅப் புனை கொடி முல்லை, நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும், கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த,