| விருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த வவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு | 195 | கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி ரெரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக் கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப் பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா | 200 | ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர் சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே பொருநர்க் காயினும் புலவர்க் காயினு மருமறை நாவி னந்தணர்க் காயினுங் | 205 | கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன வடையா வாயிலவ னருங்கடை குறுகிச் செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு மின்முக முடையையு மினிய னாதலுஞ் செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த |
177 : 3 - 5, 9 : 22 - 3); "மாரிப் பிடிக்கை நால்புறல் கடுப்ப, நீர் பொறையாற்றாது நெகிழ்ந்துவீ ழிசைந்த, காரிருங் கூந்தல்"(பெருங். 1. 40 : 194 - 5); "பிடிக்கைக் கூந்தல்" (சீவக. 2663) 194."அவைப்புமா ணரிசி"(அகநா. 394 : 3) அமலைவெண்சோறு "அமலைக்கொழுஞ்சோறு"(புறநா. 34 : 14) 196. (பி-ம்.) ‘நாவிலங் கெயிற்று' 197. கவர்வு விருப்பாகு மென்னுஞ் சூத்திரத்தில்,"கவைத்தற் சொற்புறநடையாற் கொள்க" என்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உரி. சூ. 64 ந. "கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்து"(மணி. 6:125) 199 - 200."முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா, ளுகிருடையடிய வோங்கெழில் யானை"(பட்டினப 230 - 31) 201."களிறுகா லுதைத்த புஞ்சப் பூழியொடு, மான்றுக ளவிய மதுப்பலி தூவவும்"(பெருங1. 33 : 85 - 6) 203.பொருநர் முதலியோர்க்கு அடையா வாயில். 206."அடையாத வாயி லகம்"(நள. 65); "விளங்கிய வடையா நெடுங்கடை மருவி" (திருக்காளத்திப். பரத்துவாச. 35) 203 - 6."நசையுநர்த் தடையா நன்பெரு வாயி, லிசையேன் புக்கென் னிடும்பை தீர" (பொருந. 66 - 7)
|