145
210வஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு
மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்
வாண்மீக் கூற்றத்து வயவ ரேத்தக்
கருதியது முடித்தலுங் காமுறப் படுதலு
மொருவழிப் படாமையு மோடிய துணர்தலு
215மரியே ருண்க ணரிவைய ரேத்த
வறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும்
வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப்
பன்மீ னடுவட் பான்மதி போல
220வின்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப்
பைங்க ணூகம் பாம்புபிடித் தன்ன
வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின்

212."ஒன்னா ரோட்டிய செருப்புகன் மறவர், வாள்வலம் புணர்ந்தநின் றாள்வலம் வாழ்த்த"(மதுரைக். 726-7); "வாளின் வாழ் நர் தாள்வலம் வாழ்த்த"(புறநா. 24 : 29); "வாய்வாண் மறவரும் வாள்வல னேத்த" (சிலப். 26 : 77)

214.(பி-ம்)‘ஊடிய துணர்தலும்'
"சூட்டியன் றேநிற்ப தோடிய வாறிவ ளுள்ளம்"(திருச்சிற். 284)
‘ஓடுதல்-கெடுதல்' என்பதற்கு இது மேற்கோள்;சீவக. 2381.

216.(பி-ம்) ‘ அறிமடம்'

217.வரிசையறிதல்: "பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கி", "பரிசின் மாக்கள், வரிசை யறிதலோ வரிதே பெரிது, மீத லெளிதே"(புறநா. 6 : 16. 121 : 2 - 4); "வேந்தன் வரிசையா நோக்கி, னது நோக்கி வாழ்வார் பலர்"(குறள், 528)

207 - 18.தகுதியுள்ளவர்களால் ஏத்தப்படுதல்.

219."பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்", "மாரி வானத்து மீனாப்பண், விரிகதிர வெண்டிங்களின்"(புறநா. 13 : 6, 396 : 26 - 7); "மன்ன ராதிபன் றாரகா கணத்திடை மதியெனப் புறப்பட்டான்"(வி. பா. சூதுபோர் .88)

220.இன்னகையாயம்: "நகையம ராய நடுங்க நடுங்கா"(பு. வெ. 75); பொருந. 85, ந. குறிப்புரையைப் பார்க்க.

219 - 20."பன்மீ னடுவட் டிங்கள் போலவும், பூத்த சுற்றமொடு பொலிந்து"(மதுரைக். 769-70); "பன்மீ னாப்பட் டிங்கள் போலப், பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை"(பதிற். 90 : 17 - 8); "விசும்பிற் கோண்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே"(சீவக. 882, ந. மேற்.)

222. கோடு: "மகர யாழின் வான்கோடு தழீஇ" (மணி. 4:56)