147
காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
240பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்
பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்
வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி
245யானா விருப்பிற் றானின் றூட்டித்
திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புல மகற்றி
விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி
நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு
250பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி

238 - 9."உரக்குரங் குயர்த்த வொண்சிலை யுரவோன், காவெரி யூட்டிய நாள்"(சிலப். 22 : 111 - 2); "தீவயி றார்த்திய திறலோன் போல" (பெருங். 1. 46 : 91)
" ‘காவெரி.......முன்' எனப் பீமசேனற்குப் பெயராயிற்றென்று ணர்க. இது சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை"(தக்க. 10, உரை)

240."பொன்வரை யன்ன பொருவி லாகத்து" (பெருங். 2. 10 : 5)

238 - 41."ஐவரு ளொருவ னன்ன வடிசினூன் மடையன்"(சீவக. 2735); "மடைநூற் செய்தியும்" (மணி. 2 : 22)

243. மு. "இளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து"(மணி.பதி.1)

244(பி-ம்.)‘விரும்பினன் பேணி'

245.மு. "ஆனா விருப்பிற் றானின் றூட்டி" (பெரும்பாண். 479)

248.குறுந். 342 : 6.

247 - 8."ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தொழித்த, விசும்புசெலிவுளியொடு பசும்படை தரீஇ"(பெரும்பாண். 491 - 2); "செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக், கடற்படை குளிப்ப மண்டி யடர்ப்புகர்ச், சிறுகண் யானை செவ்விதி னேவிப், பாசவற் படப்பை யாரெயில் பலதந், தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம், பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கி" (புறநா. 6 : 11 - 6); "குரிசி லடையாரைக் கொண்டகூட் டெல்லாம், பரிசின் முகந்தன பாண்"(பு. வெ. 51)

250.பாற்கதிர்: "பான்முகந் தன்ன பசுவெண் ணிலவின்" (நற். 196 : 2); "பாலெனப் பரத்தரு நிலவின் மாலை" (அகநா. 259 : 9);