155

54. செய் பூ கண்ணி செவி முதல் திருத்தி - கிடேச்சையாற் செய்த பூவினையுடைய மாலையைச் செவியடியிலே நெற்றிமாலையாகக் கட்டி,

55. நோன் பகடு உமணர் ஒழுகையொடு வந்த மந்தி (56) - வலியினையுடைத்தாகிய எருத்தினையுடைய உப்புவாணிகருடைய சகட வொழுங்கோடே கூடவந்த மந்தி,

56. மகாஅர் அன்ன மந்தி - அவர்கள் வளர்த்தலின் அவர்கள் பிள்ளைகளையொத்த மந்தி,

56 - 58. மடவோர்1நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி - அவ்விடத்து மடப்பத்தையுடைய மகளிருடைய எயிற்றையொத்த செறிந்த நீர்மையையுடைய முத்தை வாள் வாய்போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றிடத்தே இட்டுப் பொதிந்து,

59 - 60. [தோள்புற மறைக்கு நல்கூர் நுசுப்பி, னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற:]

நுசுப்பின் நல்கூர் புறம் தோள் மறைக்கும் உமட்டியர் - நுசுப்பினது நல்கூர்ந்த புறத்தைத் தோள் மறைக்கும் உமட்டியர்,

என்றது: இடை தனது நுண்மையால் நெகிழ முயங்குங்காலத்து ஊற்றின்பம்பெறாது மிடிப்பட்ட புறத்தினைத் தோள் இறுகமுயங்கி அவ்வின்பத்தைக் கொடுத்தற்குக் காரணமான உமட்டியரென்றவாறு.

ஊற்றின்பம் பெற்றறியாதென்னும் புறங்கூற்றையென்றுமாம்.

உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற - அசைகின்ற இயல்பினையுடைய ஐந்து பகுதியாகிய மயிரினையுடைய உப்புவாணிகத்தியர்பெற்ற,

61. கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் - விளங்குகின்ற பூணையுடைய பிள்ளைகளுடனே தானும் கிலுகிலுப்பை கொண்டு விளையாடும்,

62. தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான் - முரிகின்ற நீரைத் தனக்கு எல்லையாகவுடைய கொற்கையென்னும், ஊர்க்கு அரசன்,

மந்தி முத்தையடக்கி உமட்டியரீன்ற புதல்வரோடே ஆடுங் கொற்கையென முடிக்க.

63. தென் புலம் காவலர் மருமான் - தெற்கின் கண்ணதாகிய நிலத்தைக் காத்தற்றொழிலையுடையார் குடியிலுள்ளோன்,

63 - 5. [ஒன்னார், மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக், கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்:]


1 "நகார்: ஆகுபெயர்" (கலித். 93 : 18, ந.)