ஒன்னார் மண் மாறு கொண்ட செழியன் - பகைவர் நிலத்தை மாறு பாட்டாலே கைக்கொண்ட பாண்டியன், மாலை வெண்குடை கண் ஆர் கண்ணி கடு தேர் செழியன் - முத்த மாலையையுடைய கொற்றக்குடை யினையும்1கண்ணிற்கு அழகு நிறைந்த கண்ணியினையும் கடிய தேரினையுமுடைய செழியன், 66 - 7. [தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே:] நனை மகிழ் தாங்கரு மரபின் தமிழ் நிலைபெற்ற மறுகின் மதுரையும் வறிது - தன்னிடத்துத் தோன்றிய மனமகிழ்ச்சி பொறுத்தற்கரிய முறைமையினையுடைய தமிழ் வீற்றிருந்த தெருவினையுடைய மதுரையும் வறிது; நனைமகிழ்: வினைத்தொகை. கோமான் (62) மருமான் (63) செழியன் (65) அவனுடைய மதுரையும் தரும் பரிசில் சிறிதாயிருக்கும். 67. அதாஅன்று - அவ்வூரன்றி. 68. [நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த:] பொய்கை நறு நீர் அடைகரை நிவந்த - பொய்கை யிடத்து நறிய நீரடைகரையிலே நின்று வளர்ந்த, 69. துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை - நெருங்குகின்ற தன்மையையுடைய கடம்பினுடைய இணைதல் நிறைந்த மாலை, கோதைபோலப் பூத்தலிற் கோதையென்றார். 70 - 71. [ஓவத் தன்ன வுண்டுறை மருங்கிற், கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்:] கோவத்து அன்ன கொங்கு உறைத்தலின் சேர்பு ஓவத்து அன்ன உண் துறை மருங்கின் - தன்னிடத்து இந்திர கோபத்தையொத்த தாதையுதிர்த்தலின் அத்தாதுசேர்ந்து சித்திரத்தை யொத்த உண்ணும் துறையிடத்தே நின்ற, 72 - 73. வரு முலை அன்ன வள் முகை உடைந்து திரு முகம் அவிழ்ந்த தெய்வம் தாமரை - எழுகின்ற பெரியமுலையையொத்த பெரிய முகை நெகிழ்ந்து அழகினையுடைய முகம்போல மலர்ந்த தெய்வத்தன் மையையுடைய தாமரை யிடத்து, "பொருளே யுவமஞ் செய்தனர்" (தொல்காப்பியம், உவமவியல், சூ. 9.) என்னுஞ் சூத்திரத்தாற், பொருளை உவமஞ் செய்தார். 74 - 6. ஆசு இல் அகம் கை அரக்கு தோய்ந்தன்ன செ இதழ் பொதிந்த செ பொன் கொட்டை ஏமம் இன் துணை தழீஇ - குற்றமில்லாத
1பொருந. 148, உரையின் குறிப்புரையைப் பார்க்க.
|