157

அங்கையைச் சாதிலிங்கந்தோய்ந்தாலொத்த சிவந்த இதழ்சூழ்ந்த செம் பொன்னாற் செய்தாலொத்த 1பீடத்திலே தன்னுயிர்க்குக் காவலாகிய இனிய பெடையைத் தழுவித்துயில் கொண்டு,

76 - 8. இறகு உளர்ந்து 2காமரு தும்பி காமரம் செப்பும் தண்பணை தழீஇய தளரா இருக்கை - இத்துயிலெழுந்தது விருப்பமருவின தும்பி சீகாமரமென்னும் பண்ணைப்பாடும் மருதநிலஞ் சூழ்ந்த அசையாத குடியிருப்பினையுடைய.

79. குணபுலம் காவலர் மருமான் - கிழக்கின்கண்ணதாகிய நிலத்தைக் காத்தற்றொழிலை யுடையார் குடியிலுள்ளோன்,

79 - 81. [ஒன்னார், ஓங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியும், தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை:] கதவம் ஓங்கு எயில் உருமு சுவல் சொறியும் ஒன்னார் தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை - கதவத்தையுடைய உயர்ந்த மதிற்றலையிலே உருமேறு தன் கழுத்தைத் தினவாற்றேய்க்கும் பகைவர் தூங்கெயிலை அழித்த தொடி விளங்கும் பெருமையையுடைய கையினையும்,

82. நாடா நல் இசை நல் தேர் செம்பியன்-ஐயுற்று ஆராயப்படாத உலகறிந்த நல்லபுகழினையும் நல்ல தேரினையுமுடைய சோழனது,

83. ஓடா பூட்கை உறந்தையும் வறிது - தன்னிடத்திருந்தோர் ஓடாமைக்குக் காரணமாகிய மேற்கோளினையுடைய உறந்தையென்னும் ஊரும் தரும்பரிசில் சிறிதாயிருக்கும்;

அது, "முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய, புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்" (சிலப். 10 : 247 - 8) என்பதனானுணர்க.

அதாஅன்று - அவ்வூரன்றி,

84 - 5. வானம் வாய்த்த வளம் மலை கவாஅன் கானம் மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய - மழை பருவம் பொய்யாமற் பெய்கையினாலே உண்டான செல்வத்தையுடைய மலைப்பக்கத்திற் காட்டிடத்தே திரியும் மயில் கூவியதற்குக் குளிர்ந்துகூவிற்றென்று அருள்மிகுதியாற் போர்வையைக் கொடுத்த,

86. அருதிறல் அணங்கின் ஆவியர் பெருமகன்-பெறுதற்கரிய வலியையுடைத்தாகிய வடிவினையுடைய ஆவியர் குடியிற் பிறந்த பெரியமகன்,

87. 3பெரு கல் நாடன் பேகனும் - பெரிய மலைநாட்டையுடைய பேகனென்னும் வள்ளலும்,


1 "பதுமபீடத் தன்னகர்" (கம்ப. கையடை. 7)

2முருகு.75, ந. குறிப்புரையைப் பார்க்க.

3சில பிரதிகளில், பெருங்கடனாடனென மூலத்தும், பெரிய கடனாடனென உரையிலும் வேறுபாடுண்டு.