பத்துப்பாட்டு திருவாவினன்குடி | சீரை தைஇய வுடுக்கையர் சீரொடு வலம்புரி புரையும் வானரை முடியினர் மாசற விமைக்கு முருவினர் மானி னுரிவை தைஇய வூன்கெடு மார்பி | 130 | னென்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் பலவுடன் கழிந்த வுண்டிய ரிகலொடு செற்ற நீக்கிய மனத்தின ரியாவதுங் கற்றோ ரறியா வறிவினர் கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு | 135 | கடுஞ்சினங் கடிந்த காட்சிய ரிடும்பை யாவது மறியா வியல்பினர் மேவரத் துனியில் காட்சி முனிவர் முற்புகப் புகைமுகந் தன்ன மாசி றூவுடை முகைவா யவிழ்ந்த தகைசூ ழாகத்துச் | 140 | செவிநேர்பு வைத்த செய்வுறு திவவி னல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் |
நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறை" (புறநா.55-18-9); "சீர் கெழு செந்திலுஞ் செங்கோடும் வெண்குன்று, மேரகமு நீங்கா விறைவன்"(சிலப். குன்றக்.); "நஞ்செந்தின் மேய வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்"(தே. மறைக்காடு) 127.புரையென்பது மரபுபற்றி வருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உவம. சூ. 17, இளம 126-7. முனிவரியல்பு. 128. "மாசற விளங்கிய யாக்கையர்"(மதுரைக். 456) 130. "உயர்நிலைமற் றென்பியக்கங் கண்டும் புறந்தரார்"(நீதி நெறி, 87; சிதம்பரமும்மணிக்கோவை, 2 : 41) 138. "புகைவிரிந் தன்ன பொங்குதுகில்"(புறநா. 398 : 20); "ஆவி யன்ன பூந்துகில்", "ஆவியந்துகி லாரமர்ந் தார்களே". "பாலா ராவிப் பைந்துகில்"(சீவக. 67, 873, 1094); "ஆவி நுண்டுகில் யாப்புறுத் தாயினும் ", "ஆவி நுண்டுகில் யாப்புறுத்து", "ஆவிநுண்டுகிலணி நலம்"(பெருங். 1. 35 : 64, 165; 1.40 : 228); "கரியவன் வெண்டுகில் கவர்தல் காட்டுவான், விரிமலர்ப் பசுந்தொடை வேனின் மன்னவன், பொருகணை முகத்தெழு புகைமு கந்துற, நிரைவளைச் செங்கர நீட்டு வார்சிலர்"(பாகவதம், கோவியரைமணந்த. 55) 140-41. "குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பு "(மலைபடு. 23)
|