1 - திருமுருகாற்றுப்படை | மென்மொழி மேவல ரின்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவி னவிர் தளிர் புரையு மேனிய ரவிர்தொறும் | 145 | பொன்னுரை கடுக்குந் திதலைய ரின்னகைப் பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குன் மாசின் மகளிரொடு மறுவின்றி விளங்கக் கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற் றழலென வுயிர்க்கு மஞ்சுவரு கடுந்திறற் | 150 | பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோ ளுமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண் மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனு |
143-4. "தேமா மேனிச் சில்வளை யாயம்" (சிறுபாண். 176); நறுவடிப், பைங்கண் மாஅத் தந்தளி ரன்ன, நன்மா மேனி" (குறுந். 331 : 5-7); "கழிகவி னிளமாவின் றளிரன்னாய்" (கலித். 57 : 13); "மாந்தளிரே மாமேனி" (சீவக. 652) 145. பசலைக்குப் பொன்: "பொன்னிற் பசந்து", "பொற்சுணங் கேர்வர மாமுலை" (பாண்டிக்கோவை); "நின்மேனி, பொன்னிற் பசந்து புலம்புவதென்" (கிளவித்தெளிவு) கடுக்குமென்பது உருவுவமத்தின்கண் வருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்;தொல், உவம. சூ. 16, இளம். பேர்; இ. வி. சூ. 642, உரை. 148.கடுவொடுங்கிய எயிறு: புறநா. 17 : 38. 151. புள்ளணி நீள்கொடி : "புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்" (சிலப். 11 : 136); "மண்ணுறு திருமணி புரையு மேனி, விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்" (புறநா. 56 : 5-6) 150-51. "பூவைப்பூ மேனியான், பாம்புண் பறவைக் கொடி" (பு.வெ. 227) 151-2. வெள்ளேறு வலவயினுயரிய: "ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த, சீர்கெழு கொடியு மவ்வே றென்ப", "ஏற்று வலனுயரிய" (புறநா. 1 : 3-4; 56 : 1); "அரசப் பெருங்கொடி யொருவலத் துயரி" (பெருங். 3. 19 : 196) 153-4. "உமையொடு புணர்ந்த விமையா நாட்டத்துக், கண்ணணங் கவிரொளிக் கடவுள்" (பெருங். 1.53 : 15-6; 5. 4 : 51-2); "எண்ணார் மும்மதி லெய்த விமையா முக்கண் ............. பிஞ்ஞகனே" (தே.திருக்கள்ளில், 3); "இமையாத முக்கண் மூவரிற் பெற்றவர்" (திருச்சிற். 14)
|