170

கடவுள் மால் வரை கண் விடுத்தன்ன அவன் வாயில் - அது தான் 1 தெய்வங்களிருக்கின்ற பெருமையையுடைய மேரு ஒரு கண்ணை விழித்துப் பார்த்தாலொத்த அவனுடைய கோபுரவாசல்.

அன்றிப் பொருநர்க்காயினும் புலவர்க்காயினும் அருமறைநாவி னந்தணர்க்காயினும் டையாவாயிலென்றாற் பொருளின்மையுணர்க.

207. செய் நன்றி அறிதலும் - பிறர் தனக்குச் செய்த நன்றியை யறிந்து அவர்க்குத் தானும் நன்மைசெய்தலையும்,

2 சிற்றினம் இன்மையும் - அறிவும் ஒழுக்கமுமில்லாத மாக்கள் திரள் தனக்கு இல்லாமையும்,

208. இன் முகம் உடைமையும் - நோக்கினார்க்கு இனியமுகத்தை எக்காலமும் உடையனாதலையும்,

இனியன் ஆதலும் - 3 முகத்தி னினிய நகாஅ அகத்து இன்னாதவ னாகாமல் நெஞ்சு முகத்திற்கேற்ப இனியனாதலையும்,

209. செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த - எக்காலமும் தன்னுடனே செறிந்து விளங்குகின்ற தலைமையினையுடைய பல கலைகளை யுணர்ந்தோர் புகழ,

210. அஞ்சினர்க்கு அளித்தலும் - தன்வீரத்தைக்கண்டு அஞ்சி வந்து 4 அடி வீழ்ந்தார்க்கு அருள்செய்தலையும்

வெ சினம் இன்மையும் - கொடிய சினமில்லாமையையும்,

5கோபம் நீட்டித்து நிற்கின்றது சினம்.

211. ஆண் அணி புகுதலும் - வீரர் நின்ற அணியிலேசென்று அவ்வணியைக் குலைத்தலையும்,

"ஆண்பா லெல்லா மாணெனற்குரிய" (தொல். மரபு. சூ. 50) என்றுகூறி, "பெண்ணு மாணும் பிள்ளையு மவையே" (தொல். மரபு.


1 மேருவிற் றேவர்கள் இருத்தலால் அதற்குச் சுராலயமென ஒரு பெயருண்டு.

2 "சிறியவினமாவது நல்லதன்நலனும் தீயதன்தீமையும் இல்லென் போரும் விடரும் தூர்த்தரும் நடருமுள்ளிட்டகுழு; அறிவைத் திரித்து இருமையுங் கெடுக்குமியல்பிற்று" என்பர் பரிமேலழகர்; திருக்குறள், 46-ஆம் அதி. அவதாரிகை.

3 "முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா, வஞ்சரை யஞ்சப் படும்" (குறள், 824)

4 "வந்தடி பொருந்தி முந்தை நிற்பிற், றண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே", "மெல்ல வந்தென் னல்லடி பொருந்தி, யீயென விரக்குவ ராயிற் சீருடை, முரசுகெழு தாயத் தரசோ தஞ்ச, மின்னனுயி ராயினுங் கொடுக்குவென்" (புறநா. 10 : 5 - 6, 73 : 1 - 4)

5 முருகு. 134 - 5, உரையைப்பார்க்க.