172

1 வரையாது கொடுத்தலும் - அங்ஙனம் கல்விமிகுதியில்லாத பரிசிலர்க்குக் கொடாதிருத்தலை மேற்கொள்ளாதே அவர்கள் அளவிற்குத் தக்கனவற்றைக் கொடுத்தலையும், இனித் தனக்கென ஒன்றும் வரைந்துவையாமற் கொடுத்தலென்றுமாம்.

218. பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த - பிறர்கையிலேற்ற பொருளால் இல்வாழ்க்கை நடத்துதலையுடைய பாணர் கூத்தர் முதலியோர் புகழ,

219. பல் மீன் நடுவண் பால் மதிபோல - பலமீன்களுக்கு நடுவிருந்த பால்போலும் ஒளியையுடைய கலைநிறைந்தமதிபோல,

220. இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி - 2இயலிசை நாடகத்தாலும் இனிய மொழிகளாலும் இனியமகிழ்ச்சியைச் செய்யும் திரளோடே இருந்தவனையணுகி,

3கலைகள் நிறைந்திருந்தமைபற்றித் தலைவற்கு ஈண்டு மதி உவமையாயிற்று.

221 - 2. பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் - பசியகண்களையுடைய கரியகுரங்கு பாம்பின்றலையைப் பிடித்தகாலத்து அப்பாம்பு ஒருகாலிறுகவும் ஒருகால் நெகிழவும் அதன்கையைச் சுற்றுமாறுபோன்ற அழகினையுடைய தண்டிடத்தே செறியச் சுற்றின நெகிழவேண்டுமிடத்து நெகிழ்ந்தும் இறுக வேண்டுமிடத்து இறுகியும் நரம்பு துவக்கும் வார்க்கட்டினையும்,

223. [மணிநிரைத் தன்ன வனப்பின்வா யமைத்து:]

மணி மநிரைத்தன்ன வனப்பின் - இரண்டுவிளிம்புஞ் சேரத்தைத்து முடுக்கின ஆணிகளாலே மணியை நிரைத்துவைத்தாலொத்த அழகினையும்,

வாயமைத்து - பொருந்தப்பண்ணி,

224. வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து - வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட தொழில்வகை யமைந்த பத்தரினையும்,

வயிறு - பத்தரினடு. தாழிபோலப் புடைபட்டிருத்தலின், அகளமென்றார்.

225 - 6. கானம் குமிழின் கனி நிறம் கடுப்ப புகழ் வினை பொலிந்த பச்சையொடு - காட்டித்துக் குமிழினுடைய பழத்தினது நிறத்தை


1 "வரையா வீகைக் குடவர் கோவே" (புறநா. 17 : 40)

2 "பாட்டாலும் கூத்தாலும் வார்த்தையாலும் அரசனுக்கு இனிய மகிழ்ச்சியைச் செய்யுமகளிர்" (பொருந. 84 - 5. ந.) என்றார் முன்.

3 முருகு. 96, ந. குறிப்புரையைப் பார்க்க.