173
யொப்பப் புகழப்படுந் துவரூட்டின கைத்தொழிலாற் பொலிவுபெற்ற போர்வையோடே,

226 - 7. [தேம்பெய், தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பின்:]

தேம் பெய்து புரி அடங்கு நரம்பின் - தேனொழுகுகின்ற தன்மையைத் தன்னிடத்தே பெய்துகொண்டு முறுக்கடங்கின நரம்பினையு முடைய,

அமிழ்து பொதிந்து 1 இலிற்றும் நரம்பு - அமிழ்தத்தைத் தன்னிடத்தே பொதிந்து துளிக்கும் நரம்பு,

இஃது ஓசையினிமைக்குக் கூறிற்று; "தீந்தே, னணிபெற வொழுகி யன்ன வமிழ்துறழ் நரம்பி னல்யாழ்" (சீவக. 722) என்றார் பிறரும்.

228. பாடு துறை முற்றிய - நீர் பாடுந்துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு,

முற்றிய: செய்யியவென்னும் வினையெச்சம்.

228 - 9. பயன் தெரி கேள்வி கூடு கொள் இன் இயம் - தனது பயன் விளங்குகின்ற இசைகளைத் தான் கூடுதல் கொண்ட இனிய யாழை,

பச்சையோடே (226) வாயமைக்கப்பட்டு வனப்பினையும் (223) திவவினையும் (222) அகளத்தினையும் (224) நரம்பினையுமுடைய (227) இன்னியமென முடிக்க.

229 - 30. [குரல்குர லாக, நூனெறி மரபிற் பண்ணி:] நூல் நெறி மரபின் குரல் குரல் ஆக பண்ணி - இசைநூல் கூறுகின்ற முறைமையாலே 2 செம்பாலையாக வாசித்து,

பாடுதுறை முற்றுதற்கு இன்னியத்தைக் குரல் குரலாகப் பண்ணியென முடிக்க.

230 - 31. [ஆனாது, முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவும்:] முதுவோர்க்கு ஆனாது முகிழ்த்த கையினை எனவும்- 3 அரசன் உவாத்தியாயன் தாய் தந்தை தன்முன் முதலியோர்க்குப் பலகாலுங் குவித்த கைகளையுடையை யென்றும்,


1 இலிற்றும்: பிலிற் மென்பதன் சிதைவுபோலும்; புறநா. 68:8.

2 "குரல் குரலாகப் பண்ணி" (சீவக. 723) என்பதற்கு, ‘செம்பாலையைப் பண்ணி' என்று பிற இடத்திலும் நச்சினார்க்கினியர் இவ்வாறே எழுதுதல் காண்க; "குரல் குரலாகிய அரும்பாலை" என்பர் சிலப்பதிகார உரையாசிரியர்கள்; சிலப். 3 : 91 - 2, உரைகள்.

3 "அரச னுவாத்தியான் றாய்தந்தை தம்மு, னிகரில் குரவ ரிவரிவரைத், தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதே, யாவருங் கண்ட நெறி" (ஆசாரக்கோவை, 16)