174

232. இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் - வீரரெறிதற்கு மனமகிழ்ந்து கொடுத்த மார்பினையுடையையென்றும்,

"விருந்தாயினை யெறிநீயென விரைமார்பங் கொடுத்தாற், கரும்பூணற வெறிந்தாங்கவ னினதூழினி யெனவே" (சீவக. 2265) என்றார் பிறரும்.

இளையோர் : மகளிருமாம்.

"வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகல, மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே" (பதிற். 63 : 4 - 5). "மகளிர் மலைத்த லல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப" (புறநா. 10 : 9 - 10) என்றார்.

233. ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் - ஏரினையுடைய குடி மக்களுக்கு நிழல் செய்த செங்கோலையுடையையென்றும்,

234. தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் - தேரினையுடைய அரசர்க்கு வெம்மை செய்த வேலையுடையை யென்றும்,

235. நீ சில மொழியா அளவை - நீ சில புகழினைக் கூறுதற்கு முன்னே,

235 - 6. [மாசில், காம்புசொலித் தன்ன வறுமை யுடீஇ:] காம்பு சொலித்தன்ன மாசு இல் அறுவை உடீஇ - மூங்கில் ஆடையை யுரித்தாலொத்த மாசில்லாத உடையினை உடுக்கப்பண்ணி,

இனி, மூங்கின் முளையிற் பட்டையுமாம்.

237. பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி - பாம்பு ஏறி மயக்கினாற்போல மயக்கின கட்டெளிவைத் தந்து,

238 - 40. [காவேரி யூட்டிய கவர்கணைத் தூணிப், பூவிரி கச்சைப் புகழோன் றன்முன், பனிவரை மார்பன் பயந்த:] கா எரி ஊட்டிய கணை கவர் தூணிபூ விரி கச்சை புகழோன் தன்முன் பனிவரை மார்பன் பயந்த-காண்டவ வனத்தை நெருப்புண்ணும்படியெய்த கணையை உள்ளடக்கின ஆவநாழிகையினையும் பூத்தொழில் பரந்த கச்சையினையு முடைய அருச்சுனன் தமையனாகிய இமவான்போலுமார்பனான வீமசேனன் கண்ட,

240 - 42. நுண் பொருள் பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில்-கூரியபொருளையுடைய மடைநூனெறியிற் றப்பாத பல வேறுபாட்டையுடைய அடிசிலை,

242 - 4. [வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த, விளங்கதிர் ஞாயிறெள்ளுந் தோற்றத்து, விளங்குபொற் கலத்தில்:] விசும்பில் வாள் நிறம் கோள் மீன் சூழ்ந்த இள கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து விளங்கு பொன் கலத்தில்-ஆகாயத்தில் ஒளியையுடைத்தாகிய நிறத்தினை "