| வெந்தெறற் கனலியொடு மதிவலந் திரிதருந் தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப் | 20 | பழுமரந் தேரும் பறவை போலக் கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண பெருவறங் கூர்ந்த கானங் கல்லெனக் கருவி வானந் துளிசொரிந் தாங்குப் | 25 | பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கலொடு வழங்கத் தவாஅப் பெருவள னெய்தி வாலுளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண் |
17. (பி-ம்.) ‘வெங்கதிர்க்கனலி', ‘வெந்திறற்கனலி' வெந்தெறற்கனலி: "தெறுகதிர்க் கனலி வெம்மை"(புறநா. 43 : 2) 18. (பி-ம்.) ‘தண் கடல் வயத்து'தாங்குநர்ப்பெறாது: "புரவலரின்மையின்"(புறநா. 69 : 2) 17 - 8. முக்காலத்துமுள்ள இயல்பையுடைய பொருளை நிகழுங்காலத்து மெய்ந்நிலைப் பொதுச் சொல்லாற் சொல்லவேண்டும்(தொல். வினை. சூ. 43,ச ந: இ-வி. சூ. 303) என்பதற்கு மேற்கோள். 20. பொருந. 64-ம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 21. கல்லென் சுற்றம்: "கல்லென் சுற்றக் கடுங்குரல்"(குறிஞ்சிப். 151)' "வரிசை யறியாக் கல்லென் சுற்றம்", "கல்லென் சுற்றமோடு கையழிந்து"(புறநா. 184 : 8 . 240 : 12) 22. புல்லென்யாக்கை: "நின்னினும் புல்லியே மன்னே"(புறநா. 141 : 8) 24. (பி-ம்) ‘தளி சொரிந்தாங்கு' "கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென"(சீவக. 2752) 23 - 4. "கார்பெற்ற புலமேபோற் கவின்பெறும்"(கலித். 38 : 12); "நெடுவேனில் சுடச்சுட நின்றுலறிக், கார்வந்து தொடத்தொட வுய்ந்திளகுங் காடொத்தனன்"(தக்க. 200); "காரிற் குளிர்ந்து குழைந்தசெழுங் கானம் பூத்த தெனக்கவினி" (வி. பா. 12-ஆம் போர். 82) 26. (பி-ம்.) ‘என்னிரும்பேர்'"ஆடுபசி யுழந்தநின் னிரும்பே ரொக்கலொடு"(பொருந. 61); புறநா. 370 : 3-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
|