| டியாமவ ணின்றும் வருது நீயிரு மிருநிலங் கடந்த திருமறு மார்பின் | 30 | முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த் திரைதரு மரபி னுரவோ னும்பன் மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கு முரசுமுழங்கு தானை மூவ ருள்ளு மிலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்.
| 35 | வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பி னல்லது கடிந்த வறம்புரி செங்கோற் பல்வேற் றிரையற் படர்குவி ராயிற் கேளவ னிலையே கெடுகநின் னவல மத்தஞ் செல்வோ ரலறத் தாக்கிக் | 40 | கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக் கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புல முருமு முரறா தரவுந் தப்பா காட்டுமாவு முறுகண் செய்யா வேட்டாங் கசைவழி யசைஇ நசைவுழித் தங்கிச் | 45 | சென்மோ விரவல சிறக்கநின் னுள்ளங் கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்து முழவி னன்ன முழுமர வுருளி யெழூஉப்புணர்ந் தன்ன பரூஉக்கை நோன்பார் மாரிக் குன்ற மழைசுமந் தன்ன |
28.மு. சிறுபாண். 143: மலைபடு. 53. 27-8. சிறுபாண். 142 - 3 ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 29. திருமறு மார்பு: ''திருமறு மார்பநீ யருளல் வேண்டும்'' (பரி.1 : 36) ; ''திருமகளாதலால்,‘புனைமறு' என்றார்'' பரி. 4 : 59. பரிமேல்) 30.(பி-ம்.) ‘புறங்கடை' 33. பொருந. 54-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 36.(பி-ம்.) ‘அல்லவை' 38. ''கேட்சின் வாழி கெடுகநின் னவலம்'' (மதுரைக். 208) 40. ''களவேர் வாழ்க்கையர்'' (மணி. 23 : 126) 40-41. ''தனிநீர் கழியினுந் தகைக்குந ரில்லென'' (சிலப். 13: 134)
|