50 | வாரை வேய்ந்த வறைவாய்ச் சகடம் வேழங் காவலர் குரம்பை யேய்ப்பக் கோழி சேக்குங் கூடுடைப் புதவின் முளையெயிற் றிரும்பிடி முழந்தா ளேய்க்குந் துளையரைச் சீறுர றூங்கத் தூக்கி | 55 | நாடக மகளி ராடுகளத் தெடுத்த விசிவீங் கின்னியங் கடுப்பக் கயிறுபிணித்துக் காடி வைத்த கலனுடை மூக்கின் மகவுடை மகடூஉப் பகடுபுறந் துரப்பக் கோட்டிணர் வேம்பி னேட்டிலை மிடைந்த | 60 | படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோண் முடலை யாக்கை முழுவலி மாக்கள் சிறுதுளைக் கொடுநுக நெறிபட நிரைத்த பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச் சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப் | 65 | பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி யெல்லிடைக் கழியுநர்க் கேம மாக மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉ மரும்பொரு ளருந்துந் திருந்துதொடை நோன்றா ளடிபுதை யரண மெய்திப் படம்புக்குப் | 70 | பொருகணை தொலைச்சிய புண்டீர் மார்பின் விரவுவரிக் கச்சின் வெண்கை யொள்வாள். |
50. (பி-ம்.) ‘வார்வை வேய்ந்த' மு. "ஆரை வேய்ந்த வறைவாய்ச் சகடத்து" (அகநா. 301 : 7) 52. (பி-ம்.) ‘கூட்டுடை' le="text-indent: 50">53. இரும்பிடி முழந்தாள்; "முழந்தா ளிரும்பிடி" (குறுந். 394 : 1) 60. படலைக்கண்ணி: பெரும்பாண். 174; "முறிமிடை படலை மாலை" (சீவக. 1889; சூளா, துறவு. 23); "இலைபுனைந்த கள்ளவிழ் கண்ணி". "இலைப்பொலிதார்", "முறிமலர்த்தார்" (பு. வெ. 6, 74, 136) 60 - 61. மு. நெடுநல். 31 - 2. 63 - 5, ஒழுகையும் உமணரும்: சிறுபாண். 55. 69. படம் புகுதல்: "படம்புகு மிலேச்சர்" (முல்லை. 66) 70. "பொருகணை தழிச்சிய புண்டீர் மார்பின்" (தொல். புறத். சூ. 8. ந. மேற்.) என்று ஓரடி காணப்படுகிறது.
|