| வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச் சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக் கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட் | 73 | கடம்பமர் நெடுவே ளன்ன மீளி யுடம்பிடித் தடக்கை யோடா வம்பலர் தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியற் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத் | 80 | தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கு முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும் வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி னீளரை யிலவத் தலங்குசினை பயந்த பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன | 85 | வரிப்புற வணிலொடு கருப்பை யாடா தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல் வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக |
73. "சுரிகையும் பூங்கச்சிடைக் கோத்து வாங்கி"(சீவக. 698, மேற்.) 75. கடம்பம் நெடுவேள்:முருகு, 225-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. நெடுகவேள்: "வென்றி நெடுவேள்"(குறுந். 111 : 2) "நெடுவேள் குன்ற மடிவைத் தேறி" (சிலப். 23: 190); முருகு. 211-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க 75 - 6. உவமையிற் பால் மயங்கியதற்கு இவை மேற்கோள்; தொல். உவம. சூ. 6, பேர். 78. (பி-ம்.) ‘கடுப்ப நெறியில்' , ‘கடுப்ப நெரியல்'. 80. அணர்ச்செவிக் கழுதை: "அணர்ச்செவிக் கழுதையாயரண்டுத் தோன்றிய"(பாகவதம், 10, அரவின்மேலாடிய. 6) 79 - 80. (பி-ம்.) ‘நோன்புறக் கணர்ச் செவி' உல்கு: "உறுபொருளும்"(குறள், 756) 81. பழ. 60, 83.(பி-ம்.) ‘நீள்வரை' 83 - 5. இலவங்காய் அணிலுக்கு உவமை: "தோன்றுபூ விலவத் தங்கட்டொகையணி லனைய பைங்காய், கான்றமென் பஞ்சி"(சீவக. 1701) 87. "கருவி நுதிகொ ணெறியிலை யீந்து" (கல்.)"பொருப்பு"(மயிலேறு .)
|