| ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி | 90 | யீன்பிண வொழியப் போகி நோன்கா ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி நுண்பு லடக்கிய வெண்பா லெயிற்றியர் | 95 | பார்வை யாத்த பறைதாள் விளவி னீழன் முன்றி னிலவுரற் பெய்து குறுங்கா ழுலக்கை யோச்சி நெடுங்கிணற்று |
88. புல்லினுள் ஒரு சாரன இலையெனவும் பெறுமென்பதற்கு இவ்வடி மோற்கோள்; தொல். மரபு. சூ.87, பேர். 87 - 8. (பி-ம்.) ‘நெடுந்தோட் டீந்திலை'. ‘நெடிந்திட ரீத்திலை' 85 - 8. "ஈந்து மேய்ந்திடைக், கருப்பையா டாக்குடில் கஞல்வ"(ஆனைக்காப். நாடு. 112); விநாயக. நாடு. 46. 83 - 8. தொல். உவம. சூ. 34, பேர். மேற்.
89. மான்றோற்பள்ளி: "வரியதட் படுத்த சேக்கைத் தெரியிழை"(அகநா. 58 : 4); "சீரூர் மரையத ளிற்றங்கு கற்குற் சிறு துயிலே"(திருச்சிற். 398) தொல். மரபு. சூ. 23. பேர். மேற். 88 - 9. ஈத்திலை வேய்ந்த குரம்பை, தோற்பள்ளி: "இலைவேய் குரம்பை யுழையதட் பள்ளி"(மதுரைக். 310) 90. பிணா உயர்திணைப் பெண்பான் மரபுப் பெயர்; தொல். மரபு. சூ. 61, பேர். மேற். 93. (பி-ம்.) ‘இடு நிலக்கரம்பை' 94. (பி-ம்.) ‘நுண்புலடுக்கிய' 95. (பி-ம்.) ‘பறைத்தாள்' விளவில் விலங்குகளைக் கட்டுதல்: "கொடுஞ்செவி ஞமலி யாத்த, வன்றிரள் விளவின்" (பெரிய. கண்ணப்ப. 3) 89 - 96. " அவை, ‘மான்றோற் ............... பெய்து' என்றவழி உவமஞ் செய்யாது அந்நிலத்தியல்பு கூறப்பட்டதாயினும் உவமத்தாற் பொருட்பெற்றி தோன்றச் செய்தாற்போல அந்நிலத்திற்கும் பயம்பாடு வெளிப்படச் செய்யாமையின் உவம இலக்கணத்துள் இதனையும் இலேசினாற் கொண்டாமென்பது"(தொல். உவம. சூ. 34, பேர் , தொழிற்றன்மையணி; தண்டி. பொருளணி. சூ. 3. மேற். 97. ஓச்சி-குத்தி; பெரும்பாண். 118.
|