| யில்லடு கள்ளின் றோப்பி பருகி மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி மடிவாய்த் தண்ணுமை நடு்வட் சிலைப்பச் | 145 | சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி வலன்வளையூஉப் பகன்மகிழ் தூங்குந் தூங்கா விருக்கை முரண்டலை கழிந்த பின்றை மறிய குளகரை யாத்த குறுங்காற் குரம்பைச் செற்றை வாயிற் செறிகழிக் கதவிற் | 150 | கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பி னதளோன் றுஞ்சுங் காப்பி னுதள நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற் கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கு மிடுமுள் வேலி யெருப்படு வரைப்பி |
கள்விலைக்கு ஆவைத்தரல்: "முருந்தே ரிளநகை காணாய் நின்னையர், கரந்தை யலறக் கவர்ந்த வினநிரைகள், கள்விலை யாட்டி .... முன்றினிறைந்தன"(சிலப். வேட்டுவ. 16); "அறாஅ நிலைச்சாடி யாடுறுதேறன், மறாஅன் மழைத்தடங் கண்ணி-பொறாஅன், கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை, நெடுங்கடைய நேரார் நிரை", "வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட், செருச்சிலையா மன்னர் செருமுனையிற்சீறி, வரிச்சிலையாற் றந்த வளம்"(பு. வெ. 2, 16) 142. தோப்பி: "தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்", "பாப்புக்கடுப் பன்ன தோப்பி"(அகநா. 35 ; 9, 348 ; 7); "துழந்தடு கள்ளின் றோப்பியுண் டயர்ந்து"(மணி, 7 : 71) 143. மதவிடை: இ - வி சூ. 282, மேற். (பி-ம்.) ‘விடைதெண்டி' 142 - 3. "நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்"(புறநா. 262 : 1); "செங்கண் மழவிடை கெண்டிச் சிலைமறவர், வெங்கண் மகிழ்ந்து விழவயர" (பெரும்பொருள்.) 144. "மடிவாய்த் தண்ணுமை நடுவ ணார்ப்ப"(நற்.130 : 2) 146. (பி-ம்.) ‘முனைதலையிருக்கை' 134 - 46. மறங்கடைக் கூட்டிய துடிநிலை யென்னுமீ புறத்திணைத் துறைக்கு இவை மேற்கோள்; தொல். புறத். சூ. 4, இளம். 151 - 2. (பி-ம்.) ‘உதணெடுந்தாம்பு'தொல். மரபு. சூ, 47. பேர், மேற். 154. இடுமுள்வேலி: அகநா. 394 : 8; சிலப். 12 : 10 ; 13 : 42.
|