19

1 - திருமுருகாற்றுப்படை

175தாவில் கொள்கை மடந்தையொடு சின்னா
ளாவி னன்குடி யசைதலு முரிய னதாஅன்


திருவேரகம்

றிருமூன் றெய்திய வியல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
யறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்
180டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
வொன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர வுடீஇ
185 யுச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்
தாறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி
நாவியன் மருங்கி னவிலப் பாடி
விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலு முரிய னதாஅன்று

175. "தாவில் கொள்கைத் தந்தொழில்" (முருகு. 89)

177. "அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்" (தொல். புறத். 20); "ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல், ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும், அறம்புரி யந்தணர்" (பதிற். 24 : 6-8)

181-2. "அந்தண ரருங்கட னிறுக்கு, முத்தீ", "ஒன்றுபுரிந் தடங்கிய விருபிறப் பாளர், முத்தீ" (புறநா. 2 : 22-3, 367 : 12-3)

179-82. "ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர், முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி, யைம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பு, மறுதொழி லந்தணர்" (சிலப். 23 : 67-70)

183. "ஒன்பது போலவர் மார்பினி னூலிழை" (தே. திருநா.)

181-4. "புன்மயிர்ச் சடைமுடிப் புலரா வுடுக்கை, முந்நூன் மார்பின் முத்தீச் செல்வத், திருபிறப் பாளர்" (சிலப். 25: 126-8)

185. "அட்டா னானே குட்டுவன், உச்சிக் கூப்பிய கையின ரென்றாற் போல்வன கடைச் சங்கத்திற்கு ஆயின சொற்கள் இக்காலத்திற்கு ஆகாவாயின" (தொல். செய். சூ. 80,.) வினைக்குறிப்புமுற்று வினை யெச்சமாயிற்றென்பதற்கு இவ்வடிமேற்கோள்; நன். வி. சூ. 351.

186-7. "நாவியன் மந்திர நடுங்கா தோதி" (மணி. 23 : 52)