155 | னள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப் புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி யாம்பி வான்முகை யன்ன கூம்புமுகி ழுறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து புகர்வாய்க் குழிசி பூஞ்சிமட் டிரீஇ | 160 | நாண்மோர் மாறு நன்மா மேனிச் சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோட் குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மக ளளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா | 165 | ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பி னிருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி |
155. "புலரி வியற் புள்ளோர்த்துக் கழிமின்" (மலைபடு. 448) 156. தயிர்கடையும் ஓசைக்குப் புலிமுழக்கு :"கடையலங் குரல வாள்வரி யுழுவை"(அகநா. 277:5); "இடும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு, நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉம்" (தொல். அகத். சூ. 41, ந; நம்பி. சூ. 182, மேற்.); "கடைதயிர்க் குரல வேங்கை"(சீவக. 2717); "தயிர் கடையு மோதை, கொல்புலி முழக்கமென்ன வயின்றொறுங் குழுமும்" (நைடதம், நாட்டுப்.15) 157. (பி-ம்.)‘வான்முகிழ்', ‘கூம்புமுகை' 157 - 8. தயிர்க்கு ஆம்பி: "புனிற்றா, எழுந்த வாம்பிக ளிடறின செறிதயி ரேய்த்த" (கம்ப. கார்காலப். 47); "அளைசித றியபோற் கிடந்தன வாம்பி" (கல்.) "கலியாப்பராரை" (மயிலேறு.) 159. பூங்சுமட்டிரீஇ; பூஞ்சுமட் டிரீஇப் போற்றுவனர் தந்த"(பெருங். 2. 5 : 49) 160. பெரியாழ். 3. : 9 163. அளைவிலையுணவு: "அளைவிலை யுணவி னாய்ச்சியர் தம்மொடும்" (சிலப். 16 : 3) 164. "நெய்விலைப் பசும்பொற் றோடும்"(.சீவக. 488) 165. நாகு: தொல். மரபு. சூ. 26, 62. பேர். மேற். 166. மடிவாய்க் கோவலர்: "மடிவிடு வீளையர்"(குறிஞ்சிப்.161); "இடையன், மடிவிடு வீளை கடிதுசென் றிசைப்ப"(அகநா . 274 : 8 - 9): "நாத்தலை மடிவிளிக் கூத்தொடு குயிறர"(சீவக. 120); "செந்நா மடிவிளி" (கூர்ம, பிலக்கமுத. 30)
|