170 | விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை யுறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவன் மேம்பா லுரைத்த வோரி யோங்குமிசைக் கோட்டவுங் கொடியவும் விரைஇக் காட்ட பல்பூ மிடைந்த படலைக் கண்ணி | 171 | யொன்றம ருடுக்கைக் கூழா ரிடையன் கன்றமர் நிரையொடு கானத் தல்கி யந்நு ணர்விர்புகை கமழக் கைம்முயன்று ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச் செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலி | 180 | னின்றீம் பாலை முனையிற் குமிழின் புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின் வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப் பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும் புல்லார் வியன்புலம் போகி முள்ளுடுத் | 185 | தெழுகா டோங்கிய தொழுவுடை வரைப்பிற் பிடிக்கணத் தன்ன குதிருடை முன்றிற் களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர்க் குறுஞ்சாட் டுருளையொடு கலப்பை சார்த்தி நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டிற் | 190 | பருவ வானத்துப் பாமழை கடுப்பக் |
170. அகநா. 54 : 10. 171. ‘உறிக்கா வாளரொடு"(சிலப். 15 : 205); பெரியாழ். 3. 1: 5 174. (பி-ம்.) ‘பன்மலரடுக்கிய', ‘பன்மலர்மிடைந்த' படலைக்கண்ணி: பெரும்பாண். 60-ஆம் அடியின் குறிப்புரை பார்க்க. 175. மலைபடு: 417; அகநா. 21 : 22 176. "கன்றம ராயங் கானத் தல்கவும்"(புறநா. 230 : 1) 177. (பி-ம்.) ‘புகை பிறப்ப' 178. ஞெலி யென்பது வினைச்சொல்லென்பதற்கு இவ்வடி மேற்கோள்; கலித். 101, ந. 179. ‘தொட்ட' என்றும் கொள்ள இடமுண்டு. 183. பல்காற் பறவை: "மழலைப் பல்காற் பறவை"(பாகவதம். கோவியரை. 28) 188. (பி-ம்.) ‘சாட்டுருளி', 'சாத்தி' 190.(பி-ம்.) ‘பாய்மழை'
|