193
கவைத்தா ளலவ னளற்றளை சிதையப்
பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற்
210காரேறு பொருத கண்ணகன் செறுவி
னுழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர்
முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவிற்
களைஞர் தந்த கணைக்கா னெய்தற்
கட்கமழ் புதுப்பூ முனையின் முட்சினை
215முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக்
கொடுங்கான் மாமலர் கொய்துகொண் டவண
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி
யீருடை யிருந்தலை யாரச்டிப்
220பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின்
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பி


207 - 8. அலவன்தாளுக்கு முறிந்த கொடிறு: "கொடிறு முறித்தன்ன கூன்றா ளலவன்" (கபிலர்சிவ. திருவிரட்டை. 28)

209. (பி-ம்.) 'பஞ்சாய்' 210. தொல். செய். ந. மேற்.

211. (பி-ம்.) ‘உழவுநுண்'

உழாஅ நுண்டொளி: "உழாஅ நுண்டொளி யுள்புக் கழுந்திய" (சிலப்.10 : 120)

217 - 8. பல்லிற் சவட்டிய நாரினால் மாலை கட்டல்: "பல்லினாற் சுகிர்ந்த நாரிற் பனிமலர் பயிலப் பெய்த, முல்லையங் கண்ணி" (சீவக. 438.); "பல்லினாற் சுகிர்ந்த நாரில்.....போதுகட்டிய குழங்கன் மாலை" (கூர்ம. பிலக்க. 43.)

212 - 9. நற்.90 : மு.

220. (பி-ம்.) ‘சண்பின்'

பொன்காண் கட்டளை: "பொன்னின், உரைதிகழ் கட்டளை"(குறுந். 192 : 3 - 4); "வண்பிணி யவிழ்ந்த வெண்கூ தாளத், தலங்கு குலை யலரி தீண்டித் தாதுகப். பொன்னுரை கட்டளை கடுப்ப" (அகநா. 178 : 9 - 11)

கண்பு: மதுரைக். 172; "கண்பகத்தின் வாரணமே" (திருஞா. தே. திருத்தோணிபுரம்)

220 - 21. இரட்டைக்கிளவி இரட்டை வழித்தானதற்கு இவ்வடிகளை மேற்கோள் காட்டி, "காண்பின் சுண்ணம் புடைத்த செஞ்சுவட்டினையும் மார்பினையும் பொன்னுரையோடும் கல்லோடும் உவமித்தமையின் இரட்டைக்கிளவி இரட்டை வழித்தாயிற்று" என்றெழுதுவர்"