194
னிரும்புவடித் தன்ன மடியா மென்றோற்
கருங்கை வினைஞர் காதலஞ் சிறாஅர்
பழஞ்சோற் றமலை முனைஇ வரம்பிற்
225புதுவை வேய்ந்த கவிகுடின் முன்றி
லவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல
கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉ
நீங்கா யாணர் வாங்குகதிர்க் கழனிக்
கடுப்புடைப் பறவைச் சாதியன்ன
230பைதற விளைந்த பெருஞ்செந் நெல்லின்
றூம்புடைத் திரடா டுமித்த வினைஞர்
பாம்புறை மருதி னோங்குசினை நீழற்
பலிபெறு வியன்கள மலிய வேற்றிக்
கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந் தாடுந்
235துணங்கையம் பூதந் துகிலுடுத் தவைபோற்
சிலம்பி வானூல் வலந்த மருங்கிற்
குழுமுநிலைப் போரின் முழுமுத றொலைச்சிப்
பகடூர் பிழிந்த பின்றைத் துகடப


தொல். உவம. சூ. 22. பேர். உழவர்கண்பின் தாதை அப்பிக் கொள்ளுதல்.

226. விறந்து: தொல். உரி. சூ. 50, சே. ந. தெய்வச். இ-வி. சூ. 282, மேற்.

226 - 7. உலக்கையிடிக்குப் பறவைகள் அஞ்சல் : "பாசவலிடித்த பெருங்கா ழுலக்கைக் கடிதிடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு" (அகநா. 141 : 18 - 9)

230. (பி-ம்.) ‘செய்நெல்லின்'

229 - 30. "மென்செந் நெல்லி, னம்பண வளவை யுறைகுவித் தாங்குக், கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும்" (பதிற். 71 : 4 - 6)

232. அகநா. 39 : 16

234. (பி-ம்.) ‘கைபிணைந்து'

235. துணங்கை: முருகு. 56; தக்க. 53-ஆம் தாழிசையின் விசேடக் குறிப்பைப் பார்க்க.

235 - 6. சிலம்பிநூலுக்குத் துகில்: "சிலம்பி கோலிய வலங்கற் போர்வையின்" (பதிற். 39 : 13); "சிலம்பிபொதி செங்காய், துகில்பொதி பவள மேய்க்கும்" (யா.கா. மேற்.); "முழுமெய்யுஞ் சிலம்பி வலந்ததுபோற் போர்வை போர்த்து" (சீவக. 340); "நுட்சிலம்பி வலந்தன நுண்டுகில்"(கம்ப. எழுச்சி. 46); "பாடி வீடுகொள்