| வையுந் துரும்பு நீக்கிப் பைதறக் | 240 | குடகாற் றெறிந்த குப்பை வடபாற் செம்பொன் மலையிற் சிறப்பத் தோன்றுந் தண்பணை தழீஇய தளரா விருக்கைப் பகட்டா வீன்ற கொடுநடைக் குழவிக் கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்கு | 245 | லேணி யெய்தா நீணெடு மார்பின் முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவிற் குமரி மூத்த கூடோங்கு நல்லிற் றச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த வூரா நற்றே ருருட்டிய புதல்வர் | 250 | தளர்நடை வருத்தம் வீட வலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇப் பாலார்ந் தமளித் துஞ்சு மழகுடை நல்லிற் றொல்பசி யறியாத் துளங்கா விருக்கை மல்லற் பேரூர் மடியின் மடியா | 255 | வினைஞர் தந்த வெண்ணெல்வல்சி |
படங்கெனக்....சிலம்பி நூல்கொடு கவிக்குமே" (தக்க. 54); "சிலம்பி, பொருவினூல் வலந்து தங்கிய வலையம்" (தணிக்கைப். நந்தியுபதேச. 29) 239. (பி-ம்.) ‘துரும்பும் போக்கி' 240-41. நெற்குவியலுக்குப் பொன்மலை:பொருந. 244, ந, 237-41. "சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக், காலிரும் பகடு போக்குங் கரும்பெரும் பாண்டி லீட்டம்,......மிக்க தன்றே","வைதெரிந் தகற்றி யாற்றி மழைபெயன் மானத் தூற்றிச், செய்யபொற் குன்றும் வேறு நவமணிச் சிலம்பு மென்னக், கைவினை மள்ளர் வானங் கரக்கவாக் கியநெற் குன்றால்" (பெரிய. திருநாட்டுச். 24-5) 242. மு. பொருந. 169-ஆம் அடியையும், அதன் அடிகுறிப்பையும் பார்க்க. 243. (பி-ம்.) ‘தளர்நடைக்குழவி' 247. குமரி மூத்த: "குமரி மூத்தவென் பாத்திரம்" (மணி.14 : 77) 246-7. பழம்பல்லுணவிற் குமரி......கூடு: "குமரிக் கூட்டிற்கொழும்பல் லுணவு" (சிலப், 10:123) 248-9. "தச்சன் செய்த சிறுமா வைய, மூர்ந்தின் புறாஅ ராயினுங் கையி, னீர்த்தின் புறூஉ மிளையோர்" (குறுந். 61: 1-3.) 249-50. "தேரொடு, தளர்நடைப் புதல்னை" (ஐங். 66:2-3)
|