| அகலிரு வானத்துக் குறைவி லேய்ப்ப அரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கைக் | 295 | குறுந ரிட்ட கூம்புவிடு பன்மலர் பெருநா ளமையத்துப் பிணையினிர் கழிமின் செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப் பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர் மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது | 300 | வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் மறைகாப் பாள ருறைபதிச் சேப்பின் பெருநல் வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல் வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட | 305 | சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம் சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத் துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து கஞ்சக நறுமுறி யளைஇப் பைந்துணர் நெடுமரக் கொக்கி னறுவடி விதிர்த்த |
292-4. பலநிற மலர்களுக்கு இந்திர வில்; "சிலைத்தார்-இந்திரவிற் போலும்மாலை" (புறநா. 10:10,36:12,61:14, உரைகள்); "பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போற், றிருவில் விலங்கூன்றித் தீம்பெய றாழ, வருதும்" (கார்.1) 298. பைஞ்சேறு: "பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபம்" (மணி. 19:115) 300. வளைவாய்க் கிள்ளை: "கிள்ளை, வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்", "வளைவாய்ச் சிறுகிளி" (குறுந். 67: 1-2, 141:1) 299-301. அந்தணர் தெருவில் கோழியும் நாயும் துன்னாமை: "பார்ப்பாரிற் கோழியும் நாயு புகலின்னா" (இன்னா. 3) 302-4. கற்புக்கு அருந்ததி: "அருந்ததி யனைய கற்பின்" (ஐங்.452); "வடமீன் போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள்" (கலித்.2:21);"வடமீன் புரையுங் கற்பின் மடமொழி, யரிவை" (புறநா.122:8-9);"தீதிலா வடமீனின் றிறமிவ டிறமென்று, மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக், காதலாள்", "வடமீன் கற்பின் மனையுறை மகளிர்" (சிலப். 1: 28-9,5:229) 305. (பி-ம்.)‘பெயர்ப்படுபத்தம்' 309. கொக்கின் நறுவடி: "நறுவடிமா" (மலைபடு.512)
|