310 | தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் வண்ட லாயமொ டுண்டுறைத் தலைஇப் புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை இரைதேர் மணிச்சிர லிரைசெத் தெறிந்தெனப் புள்ளார் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது | 315 | கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த வேள்வித் தூணத் தசைஇ யவனர் ஓதிம விளக்கி னுயர்மிசைக் கொண்ட வைகுறு மீனிற் பைபயத் தோன்றும் நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ் | 320 | வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉம் நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை மாட மோங்கிய மணன்மலி மறுகிற் பரதர் மலிந்த பல்வேறு தெருவில் சிலதர் காங்குஞ் சே ணுயர் வரைப்பின் | 325 | நெல்லுழு பகட்டொடு கறவை துன்னா மேழகத் தகரோ டெகினங் கொட்கும் கூழுடை நல்லிற் கொடும்பூண் மகளிர் கொன்றை மென்சினைப் பனிதவழ்ல்பவையோற் பைங்கா ழல்கு னுண்டுகி னுடங்க | 330 | மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந் தாலும் பீலி மஞ்ஞையி னியலிக் கால |
312, "புனலாடு மகளி ரிட்ட வொள்ளிழை" (ஐங், 100:1) 313. மணிச்சிரல்: சிறுபாண், 181: மணி.4:24. 315-6. "அந்தி யந்தண ரருங்கட னிறுக்கு, முத்தீ"(புறநா. 2:22-3) 317. சீவக.65. 318. (பி-ம்.) 'பையத்தோன்றும்' பைபய: பெரும்பாண். 334. 319-20, பாற்கேழ்ப்புரவி : "பால் புரை புரவி" (பொருந. 165) 325-6. (பி-ம்.) 'துன்னா தேழகத் தகரோடு' 330-31. மகளிர் நடைக்கு மயில் நடை: "மணிவரைச் சாரல் மஞ்ஞை போல, அணிபெற வியலி யடிக்கல மார்ப்ப" (பெருங்.3.13:50-51); முருகு. 205-ஆம் அடியின் அடிகுறிப்பைப் பார்க்க.
|