பத்துப்பாட்டு | | பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட் |
(திரி.1); "இருநிலமடந்தை" (திருவொற்றியூரொருபா.1) இங்கே பரியாய மொழிகள் அடையடுத்துவந்தன.வலனேர்புதிரிதரு: "நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு" (பட்டினப். 67) இந்த அடி, ஆசிரியத்துட் பிறதளை விரவிவந்ததற்கும் (தொல். செய். சூ. 28, பேர்.), தாஅ வண்ணத்திற்கும் (தொல். செய். சூ. 215, பேர்.) சீர்வகை இணைமோனைக்கும் (தொல். செய். சூ. 92, ந.) மேற்கோள். "அது வடமொழியன்று; ஈண்டு உலகமென்றது உயிர்க்கிழவனை; ‘உலகமுவப்ப' என்றதுபோல" (சீவக. 1. ந.); ‘ "உலகமுவப்ப வலனேர்புதிரிதரு " .............. என்பனபோல, ‘ புகழ்தரு ' ஒருசொல் " (தஞ்சை. 407, உரை) 2. ஞாயிறு புகழப்படுதல்: "முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி, ஏமுற விளங்கிய சுடர்"(நற். 283: 6-7), "தயங்கு திரைப் பெருங்கட லுலகுதொழத் தோன்றி, வயங்குகதிர் விரிந்த வுருவு கெழு மண்டிலம்" (அகநா. 263: 1-2), "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும், காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு, மேருவலந் திரிதலான்", "உலகுதொழு மண்டிலம்" (சிலப். 1 : 4-6, 14 : 4), "பேராழி யுலகனைத்தும் பிறந்தகலி யிருணீங்க, ஓராழி தனை நடத்து மொண்சுடரைப் பரவுதுமே" (கலிங்க. 7); "ரவிவாழி ", "அகலிடந்தொழுந் துவாதசாதித்தர்" (தக்க. 9, 354), "பலர் புகழ் ஞாயிறு படரி னல்லதை" (சிவ. போ. சிறப்பு.), "இகன் மைந்தன், றனைய ளித்திமற் றென்னினு மிருநிலந் தாடொழத் தக்கோனே" (வி. பா. சம்பவச். 35) இவ்வடி முருகன் செந்நிற முடையோன் என்பதற்கும் (சிலப். 1: 36-9, அடியார். பக். 39), வினையுவமத்தின் கண்ணும் (தொல். உவம. சூ. 12, இளம்.), உருவுவமத்தின் கண்ணும் (தொல். உவம. சூ. 16, பேர்.) ஆங்கென்பது வருமென்பதற்கும், ‘ஆங்கு' உவம உருபென்பதற்கும் (தஞ்சை. 283, உரை) மேற்கோள். ‘ஆங்கு' என்பது வினையெச்சமென்று பொருள்படும்படி இவ்வடியை எடுத்துக் காட்டுவர் ; இ. கொ. சூ. 86, உரை. 1-2. சூரியன் உவமை : புறநா. 4 : 15-6. இவ்வடிகள் ஈரசைச் சீர்களுக்கு மேற்கோள்; தொல். செய். சூ. 12, பேர். 3. சேண்விளங் கவிரொளி : முருகு. 18. 4. நோன்றாள் : "வன்றாளினிணை" (திவ்.பெருமாள். 9 : 1.)
|