| குழிநிறுத் தோம்பிய குறுந்தா ளேற்றைக் | 345 | கொழுநிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவிர் வான மூன்றிய மதலை போல ஏணி சாத்திய வேற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத் திரவின் மாட்டிய விலங்குசுடர் ஞெகிழி | 350 | உரவுநீ ரழுவத் தோடுகலங் கரையும் துறைபிறுக் கொழியப் போகிக் கறையடிக் குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும் வண்டோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த மஞ்சண் முன்றின் மணநாறு படப்பைத் | 355 | தண்டலை யுழவர் தனிமனைச் சேப்பின் தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம் வீழி றாழைக் குழவித் தீநீர்க் கவைமுலை யிரும்பிடிக் கவுண்மருப் பேய்க்குங் குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம் | 360 | திரளரைப் பெண்ணை நுங்கொடு பிறவும் தீம்பஃறார முனையிற் சேம்பின் முளைப்புறா முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயல் மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகின் புடைசூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய் | 365 | ஆயாறுசெல் வம்பலர் காய்பசி தீரச் சோறடு குழிசி யிளக விழூஉம் வீயா யாணர் வளங்கெழு பாக்கத்துப் பன்மர நீளிடைப் போகி நன்னகர் விண்டோய் மாடத்து விளங்குசுவ ருடுத்த |
348. "விண்டோய் மாடத்து" (பெரும்பாண். 369) 349-51. "இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்" (சிலப்.6:141) 352. புறநா. 38:1. 42:2 357. குழவி ஓரறிவுயிரின் இளமைப்பெயர்: தொல், மரபு. சூ. 24, பேர். மேற். 363. "மேகமேய்க்கு மிளங்கமு கம்பொழில்" (தே.பிரமபுரம், "வியங்கயனூர்")
|