370 | வாடா வள்ளியின் வலம்பல தரூஉம் நாடுபல கழிந்த பின்றை நீடுகுலைக் காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப் பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண் வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க் | 375 | குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப் பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக் காரகற் கூவியர் பாகொடு பிடித்த இழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோல் நிழறாழ் வார்மண னீர்முகத் துறைப்பப் | 380 | புனல்கால் கழீஇய பொழிறொறுந் திரள்காற் சோலைக் கமுகின் சூல்வயிற் றன்ன நீலப் பைங்குடந் தொலைச்சி நாளும் பெருமகி ழிருக்கை மரீஇச் சிறுகோட்டுக் குழவித் திங்கட் கோணேர்ந் தாங்குச் | 385 | சுறவுவா யமைத்த சுரும்புசூழ் சுடர்நுதல் |
370. "வாடா வள்ளியங் காடு" (குறுந். 216:2): "வாடாவள்ளி வயவர்" (தொல். புறத்.சூ.5) 372-3. "பைந்நாகப் பள்ளி மணிவண்ணனிற் பாயல்கொண்டு, கைந்நாகந் துஞ்சுங் கமழ்காந்தளஞ் சாரல் போகி"(சீவக.17) பாம்பிற்குக் காந்தள்: "திருமணை யுமிழ்ந்த நாகங் காந்தட், கொழுமடற் புதுப்பூ வூதுந் தும்பி, நன்னிற மருளு மருவிடர்"(அகநா.138:17-9) 374. மு.மணி. 4:5 "வெயிலொளி யறியாத விரிமலர்த் தண்காவிற், குயிலாலும்" (கலித்.30: 7-8); "கதிர்நுழை கல்லா மரம் பயில் கடிமிளை (புறநா. 21:5); "வெயில்கண் போழாப் பயில்பூம் பொதும்பு"(பெருங்.1.33:27); "காய்கதிர் நுழையாக் கடிபொழில்" " (பொருளியல்); "வெய்யோன், றானுழை யாவிருளாய்....... காட்டுமொர் கார்பொழிலே" (திருச்சிற். 116) 377. (பி-ம்.) ‘கூவியன்' "கூவியர்-அப்பவாணிகர்; 'காரகற்......பிடித்த' என்றார். பெரும்பாணாற்றிலும்"(சிலப்.5:24. அடியார்,) 380. "புனல்கால் கழீஇய மணல்வார் புறவு" (மலைபடு. 48) 384-5. சுறவுவாயென்னும் தலையணிக்கு அரவு: "எரிகதிர் மகரவாய் பொறித்த, திலகமே லிடத்துச் செங்கதிர் தொடர்ந்த சேயொளி யரவென நாற்றி" (ஆனைக்காப், அகிலாண்ட.29)
|