205
420கச்சி யோனே கைவண் டோன்றல்
நச்சிச் சென்றோர்க் கேம மாகிய
அளியுந் தெறலு மெளிய வாகலின்
கலைந்தோர் தேஎ மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎ நன்பொன் பூப்ப
425நட்புக்கொளல் வேண்டி நயந்திசி னோரும்
துப்புக்கொளல் வேண்டிய துணையி லோரும்
கல்வீ ழருவி கடற்படர்ந் தாங்குப்
பல்வேறு வகையிற் பணிந்த மன்னர்
இமையவ ருறையுஞ் சிமையச் செவ்வரை
430வெண்டிரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
பொன்கொழித் திழிதரும் போக்கருங் கங்கைப்
பெருநீர் போகு மிரியன் மாக்கள்
ஒருமரப் பாணியிற் றூங்கி யாங்குத்
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச் 
435செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்துப்


398-420. இவ்வடிகளிற் காஞ்சிநகரத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

421.(பி-ம்.) 'ஏமமாக'

422. (பி-ம்.) 'அளியுந் தெறலுந்தனக் கெளிய'

அளியும் தெறலும்: "வலியுந் தெறலு மளியு முடையோய்" (புறநா. 2:8); "குடையையும் வாளையு முடையோ னெனவே அளியுந் தெறலு முடைமை கூறினார்" (சிலப். 19: 19-20, அடியார்.)

423-4. கருத்து: "நீ, உடன்று நோக்கும் வாயெரி தவழ, நீ நயந்து நோக்கும் வாய்பொன் பூப்ப" (புறநா. 38: 5-6)

427. "இருங்கடற் கூங்கிவரும் யாறென" (பரி. 16:27)

429. (பி-ம்.) ‘இமையோர்'

மேருமலையில் தேவருறைதல்: "தெய்வத வரையே மேலைத் தேவரா லயமே" (திருவிளை. மேருவைச். 24); "சுரலாயமே மேரு" (சூடாமணி, 5:13)

432. (பி-ம்.) ‘நீர்ப்போகும்'

ஒருமரம்: "ஒரு மரத்தோணியும் மேல் கொண்டு" (பு. வெ. 111, உரை)

428-35. மன்னர்.........செவ்வி பார்க்கும் முற்றம்: "கோக்கள் வைகும் முற்றத்தான்" (கம்ப. குகப்.65)