| பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும் கருங்கைக் கொல்ல னிரும்புவிசைத் தெறிந்த கூடத் திண்ணிசை வெரீஇ மாடத் திறையுறை புறவின் செங்காற் சேவல் | 440 | இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும் வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி | 445 | இடைத்தெரிந் துணரு மிருடீர் காட்சிக் கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத் துரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகிப் பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான் கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப் | 450 | புலவர் பூண்கட னாற்றிப் பகைவர் கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும் வென்றி யல்லது வினையுடம் படினும் ஒன்றல் செல்லா வுரவுவாட் டடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக | 455 | மள்ளர் மள்ள மறவர் மறவ |
441-2.பொருந. 135-6. 443-5. "முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற் கெளியனாய்" (குறள், 386, பரிமேல்.) "முறைவேண்டுபொழுதிற் பதனெளியோர்" (புறநா. 35:15) 445. (பி-ம்.) ‘இடைதெரிந்து' 446. "கொடைக்கட னிறுத்த செம்மலோய்" (மலைபடு.543); "கொடைக்கட னிறுக்கு மிக்குவா குப்பெயர்ப் பெரியோன்" (கூர்ம. சூரியன்மரபு.8) 447. (பி-ம்.) ‘உருப்பில்' "உரும்பில் கூற்றத் தன்ன" (பதிற்.26:13) இவ்வடியின் பாடபேதம் போற்றோற்றும்' "உருமில் சுற்றம்" என்னும் பகுதியை, உருமென்பது அச்சமென்னும் பொருள் தருதற்கு மேற்கோளாகக் காட்டினர்; தொல். உரி. 67, இளம். சே. ந. 448-9 பொருந. 140-42. 451, "தொல்லிலங்கை குடுமி கொண்டு"(கூர்ம. சுவேத. 5)
|