| செல்வர் செல்வ செருமேம் படுந வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்குத் | 460 | தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி வந்தேன் பெரும வாழிய நெடிதென இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக் கடனறி மரபிற் கைதொழுஉப் பழிச்சி நின்னிலை தெரியா வளவை யந்நிலை | 465 | நாவலந் தண்பொழில் வீவின்று விளங்க |
455-6 இடையின வெதுகைக்கு இவ்வடிகள் மேற்கோள்; தொல். செய். சூ.94, பேர். ந. 457-8 முருகக்கடவுள் கடலிற் சூர்கொன்றமை: முருகு. 45-6-ஆம் அடிக்குறிப்பையும், மேற்படி 45-61-ஆம் அடிகளின் அடிக்குறிப்பையும் பார்க்க. 454-8. "தொண்டையோர் மருக......சேய்' என்றாற்போல்வன ஏகாரத்தாற் பொருள் கூறுமாறு உணர்க" (தொல். விளி. சூ. 34. ந.) 459. (பி-ம்.) 'நொடிந்தாங்கு' துணங்கை: பெரும்பாண். 235- பார்க்க. "பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித் தாங்கு "(கலித். 89:8), "காடுகெழு செல்விக்குப் பேய் கூறும் அல்லல்போல"(தொல். மெய்ப். சூ. 12, பேர்.) என்பவற்றாலும் பரணி நூல்களில் உள்ள, ‘காளிக்குக் கூளி கூறியது' என்னும் பகுதியாலும் இங்கே கூறப்படும் செய்தி அறியப்படும். 458-9. முருகு. 258. 460. தண்டா வீகை: "தண்டா வீகைத் தகைமாண் குடுமி" (புறநா.6:26); "தண்டாம லீவது தாளாண்மை" (தமிழ்நா. 33) பெரும்பெயர்: முருகு, 269-ஆம் அடியின் அடிகுறிப்பைப் பார்க்க. 461. (பி-ம்.) ‘வாழிய பெரிதென' முருகு. 285-ஆம் அடியையும் அடிகுறிப்பைப் பார்க்க. 463. கைதொழுஉப் பழிச்சி: "கைதொழுஉப் பரவி" (முருகு. 252) 465. நாவலந்தண் பொழில்: "நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடை" (பரி.5:8); "நாவலந் தண்பொழில் மன்னர்", "நாவலந் தண்பொழி னண்னார் நடுக்குற" (மணி, 22:29); "நாவலந் தண்பொழி னண்ணா ரோட்டி", "நாவலந் தண்பொழி னலத்தொடு தோன்றி" (பெருங். 2.18:76,5.3:183); "பூமலி
|