208
நில்லா வுலகத்து நிலைமை தூக்கி
அந்நிலை யணுகல் வேண்டி நின்னரைப்
பாசி யன்ன சிதர்வை நீக்கி
ஆவி யன்ன வவிர்நூற் கலிங்கம்
470இரும்பே ரொக்கலொ டொருங்குட னுடீஇக்
கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோ னட்ட பல்லூன் கொழுங்குறை
அரிசெத் துணங்கிய பெருஞ்செந் நெல்லின்
தெரிகொ ளரிசித் திரணெடும் புழுக்கல்
475 அருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும்
விருப்புடை மரபிற் கரப்புடை யடிசில்
மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்
தானா விருப்பிற் றானின் றூட்டி
480மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கும்
ஆடுவண் டிமிரா வழலவிர் தாமரை
நீடிரும் பித்தை பொலியச் சூட்டி.


நாவற் பொழிற்கு", பூமலி நாவற் பொழிலகத்து" (பு. வெ. 208,226)

466. (பி-ம்) 'நிலைமை நோக்கி'

மு. பொருந. 176.

469. "புகை முகந் தன்ன மாசி றூவுடை" (முருகு. 138) என்பதையும் அதன் அடிக்குறிப்பையும் பார்க்க.

468-70. பொருந. 153 - 7-ஆம், அடிகளையும் அவற்றின் அடிக்குறிப்பையும் பார்க்க.

475. (பி-ம்.) 'அயிரொடு பிறவும்'

477. "கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ"(புறநா. 392:17)

479. மு. சிறுபாண். 245.

478-9. முகனமலர்ந்தூட்டி: "முகனமர்ந்து நல்விருந் தோம்புவான்", "முகத்தா னமர்ந்தினிது நோக்கி" (குறள், 84, 93)

481. (பி-ம்.) ‘அழலிவர்'

"ஆடும்வண் டிமிராத் தாமரை" (புறநா. 69:20)

482. (பி-ம்.) ‘பித்திகை'. 'நிவப்பச் சூடி'

481-2. வண்டு இமிரா மாலை: கற்பக மாலை; "ஆடு .... சூடி பாணாறு" (தக்க. 562, உரை)