| பரவுக்கடன் முகந்த பருவ வானத்துப் பகற்பெயற் றுளியின் மின்னுநிமிர்ந் தாங்குப் | 485 | புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின் தொடையமை மாலை விறலியர் மலைய நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல் வளைகண் டன்ன வாலுளைப் புரவி துணைபுணர் தொழில நால்குடன் பூட்டி | 490 | அரித்தேர் நல்கியு மமையான் செருத்தொலைத் தொன்னாத் தெவ்வ ருலைவிடத் தொழித்த விசும்புசெ லிவுளியொடு பசும்படை தரீஇ அன்றே விடுக்குமவன் பரிசி லின்சீர்க் கின்னர முரலு மணங்குடைச் சாரல் | 495 | மஞ்ஞை யாலு மரம்பயி லிறும்பில் கலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவில் மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற் செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக் |
483. (பி-ம்.) ‘புலவுக் கடல்)' 486. (பி-ம்.) ‘விறலியர் வேய' 480-86. பாணர் பொற்றாமரையையும் விறலியர் மாலையையும் உபகாரிகளாற் பெறுதல்: பொருந. 159-62-ஆம் அடிகளின் அடிகுறிப்பைப் பார்க்க. 489. நால்கு-நான்கு; "நால்கு பண்ணினர்" (சீவக. 1774) 488-9. பொருந. 165. 490. பரிசிலர்க்குத் தேரைக் கொடுத்தல்: சிறுபாண்,142-3-ஆம் அடிகளின் அடிகுறிப்பைப் பார்க்க. 491. (பி-ம்.) ‘ஒழிந்த' "ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்து" (பெரும்பாண். 419) 492. (பி-ம்.) ‘விசும்புதோ யிவுளி' 491 -92. சிறுபாண். 247-8-ஆம் அடிகளையும் அவற்றின் அடிகுறிப்பைப் பார்க்க. 494. கின்னரங்கள் பாடுதல்: "பாடு கின்றன. கின்னர மிதுனங்கள் பாராய்" (கம்ப. சித்திரகூட.12); "பாடுவன பூவையோ கின்னரங்கள் பலவுமே"(தக்க.114) 496,பத்துப் - 14 (பி-ம்.) 'மலர்சூழ்'
|