210
களிறுதரு விறகின் வேட்கும்
500ஒளிறிலங் கருவிய மலைகிழ வோனே.
 

498-9. யானை தந்த விறகினால் முனிவர் தீவேட்டல்: "கானயானை தந்த விறகிற், கடுந்தெறற் செந்தீ வேட்டு" (புறநா. 251: 5-6)

500. மலைகிழவோன்: முருகு. 317-இன் அடிகுறிப்பைப் பார்க்க.

மலைகிழவோன்: "இயல்பினும் விதியினும்" என்னும் சூத்திர உரையில் விதவாதவற்றுள்ளும் உயிர்முன் ககரம் மிகாததற்கு இது மேற்கோள்; நன், சூ. 164, மயிலை.

497-500. "யானை தந்த முளிமர விறகிற், கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து, மடமான் பெருநிரை வைகுதுயி லெடுப்பி, மந்தி சீக்கு மணங்குடை முன்றில்" (புறநா. 247: 1-4)

இதன் பொருள்

1. அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி - 1தன்னையொழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே, அகன்று விரிதற்குக் காரணமாகிய பெரிய ஆகாயத்திடத்தே தோன்றிப் பரந்த இருளை விழுங்கா நின்று (பி-ம். மறைத்து),

அகலிருவிசும்பென்பது, "நோய்தீருல்மருந்து" (கலித். 60:18) போநின்றது. பருகியென்னுஞ் 2செய்தெனெச்சம் நிகழ்காலம் உணர்த்தி நின்றது.

2. பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி - மறைந்த 3பகற் பொழுதை உலகத்தே தோற்றுவித்து எழுதலைச்செய்யும் பல கிரணங்களையுடைய கனலி,

3. காய் சினம் திருகிய கடுதிறல் வேனில் - கோபிக்கின்ற 4சினம் முறுகிய கடிய வலியையுடைய முதுவேனிற் காலத்தே,

4. பசு இலை ஒழித்த பரு அரை பாதிரி- பின்பனிக் காலத்தே பசிய இலைகளைஉதிர்த்த பரிய தாளினையுடைய பாதிரியினது,

5-6. வள் இதழ் மா மலர் வயிறு இடை வகுத்ததன் உள் அகம் புரையும் ஊட்டுஉறு பச்சை-பெருமையையுடைய


1 "தன்னை யொழிந்த பூதங்கள் விரிதற்குக் காரணமாகிய பெருமையையையுடைய ஆகாயம்" (மதுரைக்.266.7, ந.); "அனைத்தும் வழிபோம் விண்ணுநீ " (தக்க.717)

2 "தொல். வினை. சூ. 42,பார்க்க.

3 "பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறும்" (மதுரைக்.7)

4. சினம் - வெயிலென்று கூறுவாருமுளர்.