என்றதனால், நாகபட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து அவள் யான் பெற்ற புதல்வனை என்செய்வே னென்றபொழுது, தொண்டையை அடையாளமாக் கட்டிக் கடலிலே விட அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரசவுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பலென்று, அவன் கூற, அவளும் புதல்வனை அங்ஙனம் வரவிடத் 1திரை தருதலின் திரையனென்று பயர்பெற்ற கதை கூறினார். திரையன் படர்குவிராயின்(37) நின் உள்ளம் சிறக்க(45) - திரையனை நினைப்பீராயின் அவனை நினைத்தலின் நின் நெஞ்சு சிறப்புக்களைப் பெறுக; சிறக்க நின்னுள்ளம்(45) என மேல் வருவதனை இதனோடும் கூட்டுக. 38. [கேளவ னிலையையே கெடுகநின்னவலம்:] நின் அவலம் கெடுக - அங்ஙனம் அவனை நினைத்துப் போகின்ற நீ 2அவன் தன்மையைக் கேட்பாயாக; 39-41. [அத்தஞ் செல்வோ ரலறத்தாக்கிக், கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக் கொடியோ ரின்றவன் கடியுடைவியன்புலம்:] அவன் கடி உடை வியல் புலம் அத்தம் செல்வோர் அலற தாக்கி கைபொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை கொடியோர் இன்று - அவனுடைய காவலையுடைத்தாகிய அகலத்தையுடைய நிலம், வழிப்போவாரைக் கூப்பிடும்படி வெட்டி அவர்கள் கையிலுள்ள பொருள்களைக் கைக்கொள்ளும் களவே உழவுபோலும் இல்வாழ்க்கைப் பொருளாகவுடைய கொடுமையையுடையோரில்லை; 42-3. உருமும் உரறாது அரவும் 3தப்பா காடு மாவும் உறுகண் செய்யா - உருமேறும் இடியாது; பாம்புகளும் கொல்லுதலைச் செய்யா; காட்டிடத்துப் புலி முதலியனவும் வருத்தஞ்செய்யா ; ஆகலின், இஃது 4அவனாணை கூறிற்று.
1. திரைதந்தமை: "மாக்கடலார்ப்பதூஉம், ........திரையனை யான் பயந்தே னென்னுஞ் செருக்கு" (பெரும்பாண். இறுதி வெண்பா) 2. (பி-ம்.) ‘அவ்வழியை அவன்தன்மையை' 3. தப்பல் - கொல்லுதல்; "ஆளன்றென்று வாளிற் றப்பார்" (புறநா. 74:2);"மைந்துடை வாளிற் றப்பிய வண்ணமும்","வாளிற் றப்பிய வல்வினை யன்றே" (மணி.பதிகம், 76, 21:60) 4. "கோள்வ லுளியமுங்கொடும்புற் றகழா, வாள்வரி வேங்கையு மான்கணமறலா, அரவுஞ் சூரு மிரைதேர் முதலையும், உருமுஞ்சார்ந்தவர்க் குறுகண் செய்யா, செங்கோற்றென்னவர் காக்கு நாடென" (சிலப். 13:5-9)என்பதும், ‘இவற்றான் இவனாணையும்
|