43-5. [வேட்டாங், கசைவுழி யசைஇ நசைவுழித் தங்கிச்சென்மோ:] ஆங்கு அசைவுழி அசைஇ - அக்காட்டின்கண்இளைத்தவிடத்தே இளைப்பாறி, நசைவுழி வேட்டு தங்கி சென்மோ - எங்களிடத்தே நீ தங்கிப்போக வேண்டுமென்று நச்சினவிடத்தே நீயும் அதற்கு விரும்பித் தங்கிச் செல்வாயாக; 45. இரவல-இரத்தற்றொழிலை வல்லோய், 45-7. [சிறக்கநின் னுள்ளம், கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்து, முழவி னன்ன முழுமர வுருளி:] முழவின் அன்ன முழுமரம் திருந்து நிலை ஆரத்து கொழு சூட்டு அருந்திய உருளி-மத்தளத்தையொத்த குறட்டிடத்தே தைத்த சிக்கென்ற தன்மையையுடைய ஆரிடத்தே நன்றாகி வளைந்த மரம் சூழ்ந்து கிடக்கப்பட்ட உருளையையும், 1.அச்சுக் கோக்கின்ற இடமுமாம். அக்குறட்டிலேதைத்துக்கிடக்கின்றது ஆர். சூட்டு-விளிம்பில் வைத்த வளைந்த மரம். 48. எழூஉ புணர்ந்தன்ன பரூஉ கை நோன்பார்-கணையமரம் இரண்டு சேர்ந்தாலொத்த பருத்தகைகளையுடைய வலிய பாரையுமுடைய, அச்சுமரத்தின் மேலே நெடியவாய் இரண்டு பக்கத்தும் நெடுகக் கிடக்கின்ற பருமரங்களைப் பரூஉக்கை யென்றார். அம்மரங்களிரண்டினையும் நெருங்கத் துளைத்துக் குறுக்கே ஏணிபோலக் கோத்தனைப் பாரென்றார். 49-50. [மாரிக் குன்ற மழைசுமந் தன்ன, ஆரை வேய்ந்த வறைவாய்ச் சகடம்:] குன்றம் மாரி மழை சுமந்தன்ன ஆரை வேய்ந்த அறைவாய் சகடம்-மலை மாரிக்காலத்து மேகத்தைச் சுமந்துநின்றாற் போன்ற 2தொத்துளிப்பாயாலேவேய்ந்த ஒலிக்கின்ற வாயையுடைய சகடம், "ஆர்வை வேய்ந்த' என்று பாடமாயின் நிறைந்தவரகு வைக் கோலாலே வேய்ந்த வென்க.
ஐவகை நிலத் திற்குரிமையும் கூறினார்' (அடியார்.) என்ற விசேட உரையும் இங்கே கருதற்குரியன. 1 "குறடு-அச்சுக்கோக்குமிடம்" (சிறுபாண்.252-3, ந.) 2(பி-ம்.) ‘தொத்தளி', ‘கொத்தளி' "ஆரைகொத்தளிப்பாய்" (திவா,)
|