218

தற்கரிய பொருள்களை உலகத்தோரெல்லாரையும் நுகரப்பண்ணும் பிறக்கிடாத புதியோர்,

என்றது, மாணிக்கமும், முத்தும்,சந்தனமும்முதலியன கொண்டு போய் விற்றுத் திரிவாரைக் கூறிற்று.

பொரு கணை தொலைச்சிய புண் தீர்மார்பின்(70)- பொருகின்ற அம்புகள் தசையைப்போக்கின புண்கள் தீர்ந்த மார்பினையும்,

சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை(73)- பத்திரம் செருகப்பட்ட கட்டுதல் இறுகும் சேலையினையும்,

கரு வில் (74) திருந்து தொடை(68)ஓச்சிய கண் அகல் எறுழ் தோள்(74)-கொடிய வில்லைத் தப்பாத தொடையிலே நிரம்பவாங்கின இடமகன்ற வலியினையுடைத்தாகிய தோளினையுமுடைய,

கடம்பு அமர் நெடு வேள் அன்ன(75)வம்பலர்(76)- கடம்பிடத்தேயிருந்த நெடிய முருகனையொத்த வம்பலர்,

மீளி (75) உடம்பிடி தட கை ஓடாவம்பலர் (76)-1கூற்றுவனையொத்த வேலைப் பெருமையையுடைய கையிலேயுடைய பிறக்கிடாதவம்பலர்,

மார்பினையும்(70), உடையினையும்(73),தோளினையுமுடைய(74) வம்பலர்,

வரை ஊர் பாம்பின் (72) வெள்கை ஒள் வாள் விரவு வரி கச்சில் (71) பூண்டு புடை தூங்க(72)- மலையிடத்தே யூர்கின்ற பாம்புபோலேயானைக்கொம்பாற் கடைந்திட்ட வெள்ளிய 2ஆசினையுடைய ஒள்ளிய வாள் தன்னிடத்தில் விரவினவரியையுடைய கச்சினாலே தோளிலே கோக்கப்பட்டு ஒரு பக்கத்தே தூங்காநிற்க,

நோன் தாள் (68) 3அடி புதை அரணம் எய்தி (69)- நடந்து வலியையுடையவாகிய காலில் அடியை மறைக்கின்ற செருப்பைக் கோத்து,

படம் புக்கு-சட்டையிட்டு,

வம்பலர்(76) தூங்க(72) எய்திப்புக்கு(69) வழங்கும்(80) பெரிய வழி (81) என்க.

77-8. தடவு நிலை பலவின் முழுமுதல் கொண்ட சிறு சுளை பெரு பழம் கடுப்ப -பெருமையையுடைய நிலையினையுடைய பலாவினடியிலே குலை கொண்டசிலவாகிய (பி-ம்: சிறியவாகிய) சுளையினையுடைய பெரிய பழத்தையொப்ப,


1. "கால வேலான்" (கம்ப.கையடைப்.11)

3. அடிபுதை அரணம்: இச்சொல்பாதரட்சை யென்பதன் மொழிபெயர்ப்பாதல் காண்க.