225

143. மல்லல் மன்றத்து மத1விடை கெண்டி-வளப்பத்தினையுடைய மன்றிலே வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்று,

144. மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப - தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் தங்களுக்கு நடுவே முழங்காநிற்ப,

145-7. [சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சிவலன் வளையூஉப், பகன்மகிழ் தூங்குந் தூங்கா விருக்கை, முரண்டலை கழிந்த பின்றை:] சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ பகல் மகிழ்தூங்கும் தூங்கா முரண் தலை இருக்கை கழிந்த பின்றை-வில்லுப்பயின்ற வலியையுடைய இடத்தோளை எடுத்து வலப்பக்கத்திலே வளைந்து பகற்பொழுதிலே மகிழ்ச்சியுடனே ஆடும் அசையாப் பொருதலையுடைய குடியிருப்பினைக் கடந்தபின்பு.

இதனாற் குறிஞ்சிநிலம் முற்கூறி அதன் பகைப்புலமும் பிற்கூறினார்.

147-8, மறிய குளகு அரை யாத்த குறுகால்- ஆட்டுமறிகள் நின்று தின்னும் தன்மையைஉடையதழைகளைத் தம்மிடத்தே கட்டின குறிய கால்களையும்,

148-9. [குரம்பைச், செற்றை வாயிற் செறிகழிக் கதவின்:]

செற்றை வாயில்-சிறுதூற்றையுடைய வாயிலினையும்,

குரம்பை-குரம்பையினையும்,

கழி செறி கதவின்-கழிகளாற்கட்டப்பட்ட கதவினையும்.

150. [கற்றை வேய்ந்த கழித்தலைச்சாம்பின்:] கழித்தலை கற்றை வேய்ந்தசாம்பின்-வரிந்த கழிகளிடத்தே வரகு கற்றைகளாலேவேய்ந்த சேக்கையையும்,

151. [அதளோன் றுஞ்சுங் காப்பினுதள:] உதள அதளோன் துஞ்சும்காப்பின்-கிடாயினுடைய தோல்களைப் பாயலாகஉடையமுதியோன் துயில் கொள்ளுங் காவலையு உடைய,

2"மோத்தையுந் தகரு முதளுமப்பரும், யாத்த வென்ப யாட்டின் கண்ணே"என்றார் மரபியலில்.

காலினையும்(148) வாயிலினையும் கதவினையும்(149) சாம்பினையும் (150) காப்பினையும் (151)உடைய குரம்பை (148) என்க.

152. நெடு தாம்பு தொடுத்த குறு தறிமுன்றில் - 3தாமணி தொடுத்த நெடிய தாம்புகள்கட்டின குறிய முளைகளையுடைய முற்றத்தினையும்,


1.விடை-கிடாயென்று முன்எழுதினர்; முருகு.282, ந.

2.தொல். மரபியல், சூ.47.

3.தாமணி: (பெரும்பாண். 243-4,ந.); "வானவர் தேனுவெல்லாந் தந்தா மணியிற்செறிபசு வாக"(திருவாரூர்க்கோவை, 35.)