153-4. கொடு முகம் துருவையொடு 1வெள்ளை சேக்கும் இடுமுள் வேலி எரு படு வரைப்பின் - வளைந்த முகத்தினையுடைய செம்மறியாட்டுடனே வெள்ளாடும்கிடக்குங் கட்டுமுள்ளாகிய வேலியினையும் உடைய எரு மிகுகின்ற ஊரிடத்து, குரம்பையினையும் (148)முன்றிலினையும் (152) வேலியினையு உடைய வரைப்பென்பக. 155. [நள்ளிருள் விடியற் புள்ளெழப்போகி:] நள் இருள் விடியல் புள் எழ -செறிந்த இருள்போகின்ற காலத்தே பறவைகள்துயிலெழாநிற்க, போகியென்பதனை மேலே கூட்டுக. 156. புலி குரல் மத்தம் ஒலிப்பவாங்கி-புலியினது முழக்கம் போலும்முழக்கத்தை உடைய மத்தை ஆரவாரிக்கும்படி கயிற்றைவலித்து, 157-8. ஆம்பி வால் முகை அன்ன கூம்புமுகிழ் உறை அமை தீ தயிர்கலக்கி-குடைக்காளானுடைய வெள்ளிய முகைகளையொத்த குவிந்த முகிழ்களையுடையஉறையாலே இறுகத்தோய்ந்த இனிய தயிரைக் கடைந்து, முகை-மொட்டு.முகிழ்-ஆடையின்மேல் புடைத்து நிற்பது. 158. 2நுரை தெரிந்து-வெண்ணையை எடுத்து, 159. புகர் வாய் குழிசி பூ சுமடு இரீஇபோகி (155)- தயிர் புள்ளியாகத் தெறித்த 3வாயையுடையமோர்ப்பானையைப் பூவாற்செய்த சுமட்டைத் தலையிலே வைத்து முற்கூறிய குறிஞ்சி நிலத்துஏறப்போய், 160. நாள் மோர் மாறும்-காலையிலே மோரை விற்கும். நல் மா மேனி - நன்றாகிய மாமையாகிய நிறத்தினையும், 161. சிறு குழை துயல்வரும் காதின்-தாளுருவி அசையும் காதினையும், பணை தோள் - மூங்கில்போலும்தோளினையும், 162. குறு நெறி கொண்ட கூந்தல்-குறியதாகிய அறலைத் தன்னிடத்தே கொண்ட மயிரினையுமுடைய, ஆய்மகள்-ஆய்ச்சாதியிற்பிறந்த மகள், மேனி முதலியவற்றை உடைய மகள். 163. அளை விலை உணவின் கிளை உடன் அருந்தி - மோர் விற்றதனால் உண்டாகிய நெல் முதலியவற்றாலே சுற்றத்தாரெல்லாரையும்உண்ணப்பண்ணி,
1.வெள்ளை-வெள்ளாடு: "சிறுதலை வெள்ளைத் தோடு" (குறுந்.163:2) 2, அகநா. 101:8 3. (பி-ம்.) 'நிறத்தையுடைய'
|