164. நெய் விலை கட்டி பசு பொன் கொள்ளாள் - பின்பு தான் நெய்யை விற்கின்ற விலைக்குக் கட்டியாகப் பசும்பொன்னை வாங்காளாய், 1அட்டியென்று பாடமோதி வார்த்தென்று கூறுதலுமாம். 165. எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம்குடி (166)- பாலெருமையையும், நல்ல பசுவையும், கரிய எருமை நாகினையும் நெய்க்கு ஒப்பாகச் சொல்லி வாங்கும்குடி, குறிஞ்சிநிலத்தே நெய்யை விற்று அவர்கள் அடித்துக்கொண்ட எருமை முதலாயவற்றை விலையாக வாங்கினாளென்க. 166. மடி வாய் கோவலர்:சீழ்க்கை பிடித்தலாலே மடித்த வாயையுடைய இடையர், குடி வயின் சேப்பின்-குடியிருப்பிலே தங்குவீராயின், 167-8. [இருகிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன, பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்:] ஞெண்டின் இரு கிளை சிறு பார்ப்பு அன்னபசு தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் - நண்டினது பெரிய சுற்றமாகிய சிறிய பார்ப்பையொத்த செவ்வித் தினையரிசியா ஆக்கின சிலுத்த சோற்றைப் பாலுடனே பெறுகுவிர்; புள்ளெழாநிற்க (155) வாங்கிக் (156)கலக்கித் தெரிந்து (158) இரீஇப் (159) போகி (155)மாறும் (160) ஆய்மகள் (162) என்க. மடிவாய்க்கோவலர்(166)வரைப்பிடத்து (154) ஆய்மகள் (162) அருத்திக் (163)கொள்ளாளாய்ப் (164) பெறூஉங் (165)குடிவயிற்சேப்பின்(166) மூரல் பாலொடும் பெறுகுவிரெனமுடிக்க. 169. தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி - செருப்பு விடா மற் கிடந்த வடு அழுந்தின வலியை உடைய அடியினையும், 170. விழு தண்டு ஊன்றியகை-பசுக்களுக்கு வருத்தம் செய்யும் தடியையூன்றின கை, மழு தின் வல் கை - மரங்களை 2ஒடியெறிந்து கொடுக்கும் கோடாரியால் தழும்பிருந்த வலிய கையினையும், 171. உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல்-இரண்டு தலைகளிலும் உறியினையுடைய காக்கள் மேலேஇருந்ததனால் உண்டாகிய தழும்புமிக்க மயிர் எரெழுந்த தோட்கட்டினையும், 172. மேம் பால் உரைத்த ஓரி-எல்லா மணமும் பொருந்தும் பசுக்கறந்த பாற்கையைத் தடவின மயிரையும்,
1. ‘நெய்விலைக்கட்டி' (164)என்பதை நெய்விலைக்கு அட்டியெனப் பிரிக்க. 2. ஒடியெறிதல்:"ஒடியவெறிந்தென்பது ஒடியெறிந்தென விகாரமாயிற்று" (கலித்,68:12. -5, ந,);"ஒடியெறிந்து வாரொழுக்கி" (பெரிய.கண்ணப்ப.75.)
|