23
குறம்பொறிக் கொண்ட நறுந்தண் சாயன்
மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்
215 முழவுறழ் தடக்கையி னியல வேந்தி
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே யதாஅன்று

பழமுதிர்சோலை

சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
220யூரூர் கொண்ட சீர்கெழு விழவினு
மார்வல ரேத்த மேவரு நிலையினும்

வியளே" (ஐங். 185 : 4); "இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ, நரம்பொடு வீணை நாவி னவின்றதோ வென்று நைந்தார்" (சீவக. 658)

215. உறழென்பது மெய்யுவம வுருபாய் வருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உவம. சூ. 15, இளம். பேர்.

214-6. "மைந்த, ரெல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து" (புறநா. 24 : 9)

217. "குன்றுதொறு ........ பண்பேயெனத் தொறுவென்பதுதான் சார்ந்த மொழிப்பொருட்குப் பன்மையும் இடமாதலும் உணர்த்தி நிற்கும்" (தொல். இடை சூ. 48, சே. ந. ; இ-வி. சூ. 289, உரை.) ‘தொறு' என்னும் இடைச்சொல் வந்ததற்கு இவ்வடி மேற்கொள்; நன். சூ. 420, மயிலை.

208-17. "முருகாற்றுப்படையுள், கச்சினன் கழலினன் ............ பன்பே யென்புழி வந்த வினையெச்ச வினைக்குறிப்பு முற்றுக்கள் ஆக்கம் பெற்றுப் பொருளுணர்த்துங்கால், கச்சைக் கட்டிக் கழலையணிந்து கண்ணியைச் சூடிக் குழலையூதிக் கோட்டைக் குறித்துப் பல்லியங்களை யெழுப்பித் தகரைப் பின்னிட்டு மயிலையேறிக் கொடியையுயர்த்து வளர்ந்து தோளிலே தொடியையணிந்து துகிலையுடுத்து ஏந்தித் தழீஇத் தலைக்கை கொடுத்து ஆடலும் அவற்கு நிலைநின்ற பண்பெனச் செய்தெ னெச்சப் பொருளை உணர்த்தி நின்றவாறு காண்க" (தொல். எச்ச. சூ. 63,.)

218. "மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇ" (குறுந். 263 : 1); "உருவச் செந்தினை குருதியொடு தூஉய்" (அகநா. 22 : 10)

219. வாரணக்கொடி : முருகு. 38, 227.

கோழியை வாரணமென்றற்கு இவ்வடி மேற்கோள்:தொல். மரபு. சூ. 68, உரை.)