232

206-7. மெல் தோல் மிதி உலை கொல்லன் முறி கொடிறு அன்ன-மெத்தென்ற துருத்தியை அமுக்கி ஊதுகின்ற உலையில் கொற்றொழில் செய்கின்றவனுடைய முறிந்த கொடிற்றை ஒத்த,

208. கவை தாள் அலவன் அளறு அளை சிதைய - கப்பித்த காலை உடைய ஞெண்டினது சேற்றின்கண் உண்டாகிய முழைகெடும்படி,

209-10. பை சாய் கொன்ற மண் படு மருப்பின் கார் ஏறு பொருத கண் அகல் செறுவின்-பசிய கோரையை அடியிலே குத்தி எடுத்த மண் கிடக்கின்ற கொம்பையுடைய கரிய கடாக்கள் தம்மிற் பொருத இடம் அகன்ற செய்யின்கண்,

211. உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்-தாம் உழப்படாத அந்த நுண்ணிய சேற்றை ஒக்க மிதித்த உழவர்,

212. முடி நாறு அழுத்திய நெடுநீர் செறுவில்-முடியாகக் கிடக்கின்ற நாற்றை நட்ட நெடிய நீரையுடைய செய்களில்,

சிதையக் (208) கொன்ற மருப்பின்(209) ஏறு பொருத செறுவில் (210) தொளியை நிரவிய வினைஞர்(211) நாற்றைய அழுத்திய செறுவென்க.

213-4. களைஞர் தந்த கணை கால் நெய்தல் கள் கமழ் புது பூ முனையின்-அச்செய்யில் களைகளைப் பறிப்பார் பறித்து ஏறட்ட திரண்ட தாளினையுடைய நெய்தலினது தேன் நாறுகின்ற புதிய பூவை வெறுத்தாராயின்,

214-6. [முட்சினை, முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக், கொடுங்கான் மாமலர் கொய்துகொண்டு:] முகை சூழ் முள் சினை முள்ளி தகட்ட கொடு கால் பிறழ் வாய் மா மலர் கொய்து கொண்டு -அரும்புகள் சூழ்ந்த முள்ளை உடைய கொம்புகளை உடைய முள்ளியின் இதழை உடைய வாகிய வளைந்த காலையும் மறிந்த வாயையும் 1கருமையையும் உடைய பூவைப் பறித்துக்கொண்டு,

216-8, அவண பஞ்சாய் கோரை 2பல்லின் சவட்டி புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி-அந்நிலத்திலுண்டாகிய தண்டானாகிய கோரையைப் பல்லாலே மென்று மென்று கிழித்து முடிந்த நாராற் கட்டின புனைதற்கினிய மாலையை,

219 ஈர் உடை இரு தலை ஆர சூடி -ஈருடைத்தாகிய கரிய தலை நிறையும்படி சூடி.

220. பொன் காண் கட்டளை கடுப்ப 3கண்பின்-பொன்னை உரைத்து மாற்றுக்காணும் உரைகல்லையொப்பக் கண்பினது,


1 முள்ளிமலர் கரியதென்பதை,"கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவும்" (சிறுபாண்.148) என்பதனாலும் அறியலாகும்.

2 பல்-நாரைக் கிழிக்கும் ஒரு கருவியென்றும் சொல்வது உண்டு.

3 பி-ம். ‘கணப்பின்' ,‘சணப்பின்'